முதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது
»
காட்சி 33 - இரவு - EXT . / ஒதுக்குப்புறமான ஓர் இடம்
சேது - காட்சி 33 - இரவு - EXT . / ஒதுக்குப்புறமான ஓர் இடம்
லாங் ஷாட் - அபிதாவின் அக்காவுடன் பைக்கில் வரும் சேது. ஆளரவமற்ற இடத்தில் பைக்கை நிறுத்துகிறான். போர்த்திக் கொண்டிருந்த சேதுவின் சட்டையை அவனிடம் கொடுத்த அபிதாவின் அக்கா அழுதபடி கைகூப்பி வணங்குகிறாள்.
சேது : சரி...!
அபி அக்கா : அடி பலமா பட்டுடுத்தா...?
சேதுவுன் கன்னத்தைத் தொட்டுக் கேட்கிறாள்.
சேது : உங்க புருஷன் எங்கே வேலை பார்க்கிறாரு..?
அப் அக்கா : சப்-ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்...
சேது : பார்த்துப் போங்க.
சேது பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்புகிறான். அபிதாவின் அக்கா அழுதபடி அவனைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள்.
குளோஸ் ஷாட் - அக்கா. குளோஸ் ஷாட் - டூ வீலரில் வரும் அம்பி அவளைப் பார்த்து அதிர்கிறான். குளோஸ் ஷாட் - அம்பியைப் பார்த்த அக்கா முகத்தில் அதிர்ச்சி. குளோஸ் ஷாட் - அம்பி முகத்திலும் அதிர்ச்சி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 31 | 32 | 33 | 34 | 35 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், அபிதாவின்