சேது - காட்சி 28 - பகல் - INT. /கல்லூரி
மிட் ஷாட் - சேதுவின் நண்பர்களும், ஊமையும் உட்கார்ந்திருக்க சேது அங்கே வருகிறான். நண்பர்களைப் பார்த்ததும் தயக்கத்துடன் நெருங்குகிறான்.
சேது : டேய்... வா போய் தண்ணி அடிப்போம்.
நண்பர்களை அழைக்கிறான்.
நண்பன் : போடா...
அடி வாங்கிய நண்பன் மறுக்கிறான்.
சேது : சரிடா... வா...
நண்பன் : விடுறா...
சேது : தாஸ்...
நண்பன் : என்னை அடிச்சது கூட முக்கியமில்லே... நம்மளை விட்டா அவனுங்களுக்கு வேறே யாருடா இருக்காங்க? நேத்து வந்தவ ரொம்ப முக்கியமாகிட்டா... டேய், ஏழெட்டு வருஷமா நம்ம பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கானுங்க... அவனை அடிவாங்க விட்டு வேடிக்கை பார்த்துட்டேயில்லே...?
நண்பன் சொன்னதும் சேது வருத்தப்படுகிறான்.
சேது : நீதானேடா சொன்னே.. சொஞ்சம்அடக்கி வாசின்னு...
நண்பன் : சொன்னேன்... அதுக்காக...?
சேது : சரி விடு... அவனுக்கு இருக்கு ஒரு நாளைக்கு... மன்னிச்சிடுடா...
நண்பன் : பரவாயில்ல.. வேண்டாம் சிய்யான் நம்ம எப்பவும் போலவே இருப்போம்.... இந்த லவ்வு கிவ்வு எல்லாம் வேண்டாம்.
சேது : முடியலேடா.. உள்ளேயிருந்து உயிரை வாங்குறா...
வேதனையுடன் தன் நெஞ்சில் குத்திக் கொள்கிறான் சேது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 26 | 27 | 28 | 29 | 30 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - நண்பன்