முதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது
»
காட்சி 26 - இரவு - EXT. / ஆள் நடமாட்டமில்லத ஓர் இடம்
சேது - காட்சி 26 - இரவு - EXT. / ஆள் நடமாட்டமில்லத ஓர் இடம்
மிட் ஷாட் - நண்பர்களுடன் பீர் குடித்துக் கொண்டிருக்கிறான் சேது. பீர் பாட்டிலைத் திறக்கும் அவன் நண்பன் பாடுகிறான்.
நண்பன் : ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இதுதான்.
பாடிய நண்பன் தொடர்ந்து பேசுகிறான்.
நண்பன் : எனக்கு அப்பவே தெரியும்... போய் லவ்வ சொல்லுடான்னா... கையைத் தட்டுனா சத்தம் வருங்கிறான்... அவங்க அப்பனைத் தூக்கிப் போட்டு மிதிப்பேங்கிறான்... என்னங்கடா?
மிட் ஷாட் - சேது பீர் குடிக்கிறான்.
மற்றொரு நண்பன் : டேய்... நான் அன்னைக்கே சொன்னேன்ல...? நீதாண்டா ஏத்திவிட்டே...?
குளோஸ் ஷாட் - நண்பன் : எனக்கென்னப்பா தெரியும்? இவன்தான் சொன்னான். என்னமோ இவனுக்காகவே முறுக்கு சுட்டு கொண்டு வந்தான்னு... இப்த்தானே தெரியுது.... இவன் பிடுங்கித் தின்னிருக்கான்னு....
நண்பன் கிண்டலாக சிரிக்கிறான்.
குளோஸ் ஷாட் - கிண்டல் பண்ணும் நண்பனை விளையாட்டாக அடிக்கிறான் சேது.
மிட் ஷாட் - மற்றொரு நண்பன் : ஒரு வழி இருக்கு... சொன்னா அடிப்பீங்க... வேண்டாம்பா...
சேது : ஐடியா...? உன் சத்துக்கு...? சொல்லு பார்ப்போம்.
மிட் ஷாட் - நண்பர் : கூடவே ஒரு கொடுக்கு இருக்கான்ல அவளை முதல்லே ஓ.கே பண்ணிட்டு அவ மூலமா இவளை (சற்றுத் தயங்கிவிட்டு) இல்லே.... இவங்களை ஓகே பண்ணலாமில்லையா? என்னயிருந்தாலும் ஒரு பெண்ணோட மனசு பெண்ணுக்குத்தானே புரியும்...?
குளோஸ் ஷாட் - சேது : ஓங்கி மிதிச்சேன்... செத்தே போவே... டெய்லி ஏதோ சினிமாபார்த்துட்டு வசனம் பேசறான். - தன்னையே நொந்துகொள்கிறான் சேது. குளோஸ் ஷாட் நண்பன் எல்லாம் கண்ணே மணியே முத்தேன்னு டயலாக் பேசிப் பேசி வயித்த நிரப்பிட்டுப் போறானுங்க பாரு, அவனுங்களைத்தான் நம்புவாளுங்க. அது மாதிரி நேக்கு போக்காப் பேச நமக்குத் தெரியமாட்டேங்குதே...
குளோஸ் ஷாட் - நண்பன் : நீ ஃபீல் பண்ணாத சிய்யான்... நம்ம சாமிய விட்டு மாமிய கரெக்ட் பண்ணவிடுவோம்.
இன்னொருத்தன் (சாமி) : அய்யோ, நான் மாட்டேம்ப்பா, எங்கப்பன் எனக்கு தெவசம் பண்ணிடுவான்.
அவன் சொன்னதைக் கேட்டுச் சிரிக்கிறான் சேது.
சேது : டேய்.... உருப்படியா ஏதாவது வழியிருந்தாச் சொல்லுங்கடா....
குளோஸ் ஷாட் - நண்பன் : நான் சொல்லட்டுமா? இந்த அடிதடி எல்லாம் விட்டுட்டு கொஞ்சம் அடக்கிவாசி. அவளுக்குப் புடிச்ச மாதிரி பட்டையை போட்டுக்கிட்டு இந்தக் கோயில் குளமெல்லாம் ஏறி இறங்கு. மசிஞ்சிடும்.
குளோஸ் ஷாட் - சேது அவன் சொன்னதைக் கேட்டு யோசிக்கிறான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - நண்பன், குளோஸ்