சேது - காட்சி 24 - பகல் - EXT> / அக்ரஹாரம்
லாங் ஷாட் - அக்ரஹாரத்தில் ஒரு மாமி வாசல் தெளித்துக் கொண்டிருக்க இரண்டு பெண்கள் பேசிக்கொண்டே ஒரு வீட்டினுள் நுழைகின்றனர்.
ஒரு பெண் : பேங்குல எவ்வளவு காசு சேர்த்து வச்சிருக்கீங்க...?
இன்னொருத்தி : ஆமா... வர்ற காசு பூ வாங்குறதுக்கே பத்த மாட்டேங்குது... என்னத்த...?
ஒரு ஆட்டோ வந்து நிற்க.
பெண் : இந்த வீடுதான்... நிறுத்துப்பா... சீக்கிரம் எறங்கேண்டி...
இன்னொருத்தி : ஆமா... பெரிய ஆபீஸ் உத்தியயோகம்...
மூன்று பெண்கள் இறங்கி வீட்டிற்குள் செல்கின்றனர்.
ஆட்டோ டிரைவர் குரல் (Overlap) : ம்... இவளுக மூஞ்சிக்கு ஆபீஸ் உத்தியோகம் வேற. ச்சே...
ஆட்டோ போகிறது.
மிட் ஷாட் - வீட்டினுள்ளே நிறைய பெண்களும் ஆண்களும் தெரிகின்றனர்.
ஆண் : இங்கேயும் கடனா? சரி சரி போ.
பெண் : டிப்ஸ் கிடைச்ச மாதிரிதான்.
என்று முனகியபடி ஒருவனுடன் அறையினுள் போகிறாள்.
விபச்சார விடுதி ஓனர் : ஏய்... எவனாவது பார்த்தான். பத்துப்பைசா தரமாட்டான்.
வாசலில் உட்கார்ந்திருக்கும் பெண்ணைத் திட்டுகிறான்.
லாங் ஷாட் \ டாப் ஆங்கிள் - தெருவில் இரண்டு அய்யர்கள் பேசிக் கொண்டு வருகிறார்கள்.
அய்யர் : அக்ரஹாரத்திலே இந்த மாதிரி பொம்மனாட்டிகள வச்சு பிசினெஸ் பண்ணினா நாம எப்படி கெளரவமா குடும்பம் நடத்தறது...?
இன்னொருவர் : நம்ம என்ன வோய் பண்றது...? வீட்டுக்காரன் ஒத்திக்கு விட்டுட்டு பம்பாயிலே செட்டில் ஆயிட்டான். கொஞ்சம் பொறுமையா இருங்க... பேசி முடிப்போம்.
மிட் ஷாட் - வீட்டு வாசலில் அம்பி உட்கார்ந்திருக்க அபிதா கல்லூரிக்குச் செல்கிறாள். அவளை அம்பி அழைக்கிறான்.
அம்பி : அபித்து...
அபிதா நின்று திரும்பிப் பார்க்கிறாள்.
குளோஸ் ஷாட் - அம்பி ஏதோ சொல்ல நினைத்து, சொல்லாமல் அபிதாவைப் போகச் சொல்கிறான்.
அம்பி : சரி போ...
அம்பி : ஏய்.....இப்படிப் போ....
மறுபடியும் அவளை அழைத்து வேறு பாதையில் போகச் சொல்கிறான்.
அபிதா : ஏன்?
அம்பி : ப்ச்...போ...
சரி என்று அம்பி சொன்ன வழியில் போகிறாள் அபிதா. அவளை சோகமாகப் பார்க்கிறான் அம்பி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts -