சேது - காட்சி 23 - இரவு - INT./ சேது வீடு.
குளோஸ் ஷாட் - பெட்ரூமிலிருக்கும் சேதுவின் அண்ணன் தன் மனைவியை அழைக்கிறார்.
அண்ணன் : ஏய்...
மிட் ஷாட் - அண்ணி எட்டிப் பார்க்க, சேதுவின் அண்ணன் அருகில் வரும்படி அழைக்கிறார்.
அண்ணி : என்னன்னு... சொல்லுங்க... வேலை கிடக்க... கொஞ்சுறாரு...
குளோஸ் ஷாட் - அண்ணன் : வந்து உட்காருடி... பெரிய கிளியோபாட்ரா... இவளை கொஞ்சுறாங்க.
மிட் ஷாட் - சேதுவின் அண்ணன் அருகில் வந்து உட்காருகிறாள் அண்ணி.
அண்ணன் : தூங்கிட்டானா....
அண்ணி : ம்....
குளோஸ் ஷாட் - சஜஷன் - அண்ணி - அண்ணன் : என்னடி இவன் வாயே திறக்கமாட்டேங்கிறான். நாமளே கேட்கணுமுன்னு எதிர்பாக்குறானோ...?
குளோஸ் ஷாட் - அண்ணி : எதைப்பத்தி....?
குளோஸ் ஷாட் - சஜஷன் அண்ணி - அண்ணன் : உருப்படியா இப்ப ஒரு காரியம் பண்ணிக்கிட்டு இருக்கானே... லவ்வு... அதைப் பத்தி. உன்கிட்டே ஏதாவது சொன்னானா...? இல்ல நீதான் அந்தப் பொண்ணப் போய்ப் பார்த்தியா...? பார்த்திருப்பியே....? உனக்குத்தான் பொறுக்காதே...
குளோஸ் ஷாட் - அண்ணன் : ... என்ன ஆள் நீ...?
குளோஸ் ஷாட் - அண்ணி: நான் எதுக்குப் பார்க்கணும்
குளோஸ் ஷாட் - அண்ணன் : என்னடி நீ உன் தங்கச்சி, கொளுந்தனைக் கட்டிக்கப் போறவ...
குளோஸ் ஷாட் - அண்ணி : வாயை மூடுங்க...
குளோஸ் ஷாட் - சேதுவின் அண்ணன் அதிர்ச்சியாகப் பார்க்கிறார்.
அண்டிண குரல் (Overlap) : வெறுப்பேத்திக்கிட்டு...
குளோஸ் ஷாட் - அண்ணி : என்ன கொழுந்தன்? காட்டுப்பய. தங்கச்சியாம் தங்கச்சி...?
எரிச்சலாக அண்ணி சொல்ல...
குளோஸ் ஷாட் - சேதுவின் அண்ணன் ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் பார்க்கிறார்.
அண்ணன் : நீதானேடி சொன்ன இப்போ...
அண்ணி : தெரியாமே சொல்லிட்டேன் சாமி... ஆளை விடுங்க.
கும்பிடு போட்டுவிட்டு அண்ணி எழுந்து போகிறாள்.
குளோஸ் ஷாட் - சேதுவின் அண்ணன் குழப்பமாக அமர்ந்திருக்கிறார்.
அண்ணி குரல் (Overlap) : நல்ல அண்ணன் தம்பிங்க. இவுங்ககிட்டே மாட்டிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே...
அண்ணியின் புலம்பல் கேட்கிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - அண்ணன், குளோஸ், சேதுவின்