சேது - காட்சி 21 - பகல் - EXT./ கோயில்
மிட் ஷாட் -அண்ணி கோயிலுக்கு வருகிறாள். யாரையோ தேடுகிறாள். கிணற்றடியில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்கும் அபிதாவைப் பார்க்கிறாள்.
குளோஸ் ஷாட் - அபிதா அண்ணியை நிமிர்ந்து பார்க்கிறாள்.
குளோஸ் ஷாட் - அண்ணி : தலைக்கு குளிச்சியா...?
குளோஸ் ஷாட் - அபிதா பதில் சொல்லாமல் அண்ணியைப் பார்க்க...
குளோஸ் ஷாட் - அபிதாவின் தலையைத் தொட்டுக் கேட்கிறாள் அண்ணி.
அண்ணி : சரியா துவட்டக் கூடாது...?
குளோஸ் ஷாட் - அபிதா மெளனமாக குழப்பத்துடன் அண்ணியைப் பார்க்கிறாள்.
குளோஸ் ஷாட் - அண்ணி : அன்னைக்கு நீ வீட்டுக்கு வந்தப்போ, யாரோன்னு நினைச்சு நான் சரியாக்கூடப் பேசல்ல...
குளோஸ் ஷாட் -அபிதா.
குளோஸ் ஷாட் - அண்ணி : தப்பா எடுத்துக்காதே... அவன் கொஞ்சம் சிடுமூஞ்சி... ஆனா ரொம்ப நல்லவன். இந்தச் சேர்க்கைதான் சரியில்லே... எதுவாயிருந்தாலும் நீதான் கொஞ்சம் பொறுத்துப் போகணும்...
குளோஸ் ஷாட் - அபிதா : நான் எதுக்குப் பொறுத்துப் போகணும்...?
குளோஸ் ஷாட் - அண்ணி : என்னம்மா, நீயும் அவனும் ஏதோ...
குளோஸ் ஷாட் - அபிதா : இதப்பாருங்கோ... ஆத்துல சின்னவா தப்பு பண்ணுனா பெரியவா கண்டிக்கணும். இப்ப நீங்களே தப்பாப் பேசுறேளே....? நேக்கு அது மாதிரி எல்லாம் ஒண்ணுமில்லே...
என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுப் போகிறாள் அபிதா.
குளோஸ் ஷாட் - அண்ணி அதிர்ச்சியாக அவைளைப் பார்க்கிறாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், பார்க்கிறாள்