சேது - காட்சி 19 - INT./ கல்லூரி வளாகம்
மிட் ஷாட் - சேது நண்பர்களுடன் நூலகத்திற்குள் வருகிறான். அங்கு படித்துக் கொண்டிருப்பவர்களை அவர்கள் விரட்டுகின்றனர்.
சேது: ஏய்... ஓடு...போடா... பெரிய அறிஞர் அண்ணா...
ஒரு பெண் (ஆசிரியை) படித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பெண்ணிடம்..
நண்பன்: புள்ள பெர்ற வயசுலே நீ எல்லாம் படிச்சு என்னப் பண்ணப்போறே...?
குளோஸ் ஷாட் - அபிதா அவர்களைப் பார்த்து மிரளுகிறாள்.
இன்னொரு நண்பன் குரல்(Overlap): ஏய்... பார்த்தா தெரியல்ல மேடம்..!
மிட் ஷாட் - நண்பன்: மேடம்...
ஆசிரியர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பது பாவனை செய்தபடி, 'போங்க' என்று விரட்டுகிறான்.
குளோஸ் ஷாட் - அபிதா கண்களில் மிரட்சி. பின்னணியில் மாணவிகள் மிரண்டு ஓடுகின்றனர். மிட் ஷாட் - அபிதாவின் தோழியும் வெளியே செல்கிறாள்.
நண்பன் : சிய்யான் பார்த்துப் பேசு... இது மத்த விஷயம் மாதிரி இல்லே... விஷ் யூ ஹேப்பி மேரேஜ் லைப்.
சேதுவின் நண்பன் அவனுக்கு அட்வைஸ் செய்து வாழ்த்திவிட்டுப் போக, இன்னொரு நண்பன் சேதுவின் கையில் முத்தமிட்டு விட்டுச் செல்கிறான்.
குளோஸ் ஷாட் : நூலகத்திற்குள் இருக்கும் அபிதா மிரண்டு பார்க்கிறாள். மிட் ஷாட் : அபிதாவை நோக்கி சேது வருகிறான். அவளும் அவனை நோக்கி வருகிறாள்.
குளோஸ் ஷாட் -அபிதா கண்களில் மிரட்சி. மிட் ஷாட் -சேது : அப்புறம்.... சாப்பிட்டாச்சா....?
குளோஸ் ஷாட் - அபிதா 'ம்' என்று பயத்துடன் தலையாட்டுகிறாள்.
குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா - சேது : பசங்க முன்னாடியே சொன்னாங்க.... இந்த மாதிரி சிய்யான் உனக்கு அது... வந்திருக்குன்னு....
தயங்கித் தயங்கி பேசுகிறான் சேது.
குளோஸ் ஷாட் - அபிதா ஒன்றும் புரியாமல் பார்க்கிறாள்.
குளோஸ் ஷாட் -சஜஷன் அபிதா -
சேது : நான் அப்ப நம்பலை... ஆனா இந்த ஒரு வாரமாவே ஒரு டைப்பாத்தான் இருக்கு....
குளோஸ் ஷாட் -அபிதா தலைகுனிகிறாள்.
குளோஸ் ஷாட் - சேதுவின் நண்பர்கள் வெளியே நின்று சேது - அபிதாவை கவனிக்கின்றனர்.
சேது குரல் (Overlap) : இதை எப்படி உன்கிட்ட சொல்லி....
குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா சேது : ...அப்படியே ஒரு சிந்தனை.... எங்க போறோம்... ஏன், எதுக்குப் போறோம்னு... தெரியாமே.... இது... இது ஒரு மாதிரி நெஞ்சைப் பிடிச்சுக் கசக்குற மாதிரி இருந்தாலும் கொஞ்சம் சுகமா நல்லாத்தான் இருக்கு....
உற்சாகமாய் பேசுகிறான் சேது.
குளோஸ் ஷாட் - அபிதா. குளோஸ் ஷாட் -சஜஷன் அபிதா - சேது : அது... ஒண்ணும் பிரச்சினை இல்ல... என்ன, அதைக் கொஞ்சம் பேசி கரெக்ட் பண்ணிட்டா நிம்மதியா இருக்கும்.
குளோஸ் ஷாட் - அபிதா : என்ன சொல்றேள்... நேக்கு ஒண்ணும் புரியலையே...
குளோஸ் ஷாட் -சேது. குளோஸ் ஷாட் - அபிதா.
குளோஸ் ஷாட் - சேது : இப்பப் பாரு...
என்று தன் இரண்டு கையையும் தட்டி சத்தம் வர வைக்கிறான்.
குளோஸ் ஷாட் - அந்தச் சத்தம் கேட்டு மிரள்கிறாள் அபிதா.
குளோஸ் ஷாட் -சேது : சத்தம் வந்துச்சா...-?
குளோஸ் ஷாட் - அபிதா 'ம்' என்று தலையாட்டுகிறாள்.
குளோஸ் ஷாட் -சேது : எப்படி வந்துச்சு...-?
குளோஸ் ஷாட் - அபிதா : ம்...?
குளோஸ் ஷாட் - சேது : ரெண்டு கையும் சேர்ந்ததினாலே....
தன் கைகளைப் பற்றிக் காட்டுகிறான்.
குளோஸ் ஷாட் -அபிதா தலைகுனிகிறாள்.
குளோஸ் ஷாட் - வெளியே நிற்கும் நண்பர்கள்.
நண்பன் : தத்துவத்தப் புழியறாண்டா...
குளோஸ் ஷாட் - சேது : அது மாதிரி தானே இதுவும்.... அப்ப நாம என்ன பண்ணணும்...?
குளோஸ் ஷாட் - அபிதா முழிக்கிறாள்.
குளோஸ் ஷாட் - சேது : ஃபர்ஸ்ட் டிஸ்கஸ் பண்ணணும்.
குளோஸ் ஷாட் \ டாப் ஆங்கிள் - சேது, அபிதா
சேது : என்னெல்லாமோ யோசிச்சு எல்லாமே மறந்து போச்சு. ஃபேன் ஓடியும் இவ்வளவு வேர்க்குதே...?
குளோஸ் ஷாட் - சேது : இதைப்பாரு... எல்லாத்தையும் நானே சொல்லணுமுன்னு எதிர்பார்க்கக்கூடாது.... எனக்கு மட்டும் கூச்சமா இருக்காதா...? அதனாலே நீயும் கொஞ்சம் எறங்கி வரணும்...
குளோஸ் ஷாட் - அபிதா : எங்கேயிருந்து எறங்கி வரணும்...?
அப்பாவியாக அபிதா கேட்க, சேது முகத்தில் டென்ஷன்
குளோஸ் ஷாட் - சேதுவின் நண்பர்கள்
நண்பன் : எனக்கு நம்பிக்கையில்ல...
இன்னொரு நண்பன் : வாய வைக்காதே அவனை அடிக்கிறான்.
குளோஸ் ஷாட் - சேது : கரெக்ட்... ஆம்பளைப் பையன்... எனக்கே இது சொல்லும் போது கை, கால் எல்லாம் உதறுகிறப்ப, உனக்குக் கொஞ்சம் வெக்கமாத்தான் இருக்கும்....
மிட் ஷாட் \ டாப் ஆங்கிள் - சேது : பட்... வேறெ வழி இல்லையே... அதனாலே நீயும் கொஞ்சம் ஓப்பன் பண்ணு...
குளோஸ் ஷாட் -சேது சொன்னதைக் கேட்டு தப்பாகப் புரிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்த அபிதா பிறகு சமாதானமாகிறாள்.
மிட் ஷாட் - சேது : ஏய்...ஏய்...ஏய்...ச்சீ...ச்சீ...
குளோஸ் ஷாட் - சேது. குளோஸ் ஷாட் - அபிதா அவனைப் பார்க்கிறாள்.
குளோஸ் ஷாட் - சேது : நான் சொல்றது புரியலையா....?
குளோஸ் ஷாட் - அபிதா : இது வரைக்கும் புரியலை...
குளோஸ் ஷாட் - சேது : சரி... முதல்லேருந்து சொல்றேன். கொஞ்சம் கவனமாக் கேட்டுக்க... என்ன?
குளோஸ் ஷாட் - அபிதா 'ம்' என்று தலையாட்டுகிறாள்.
குளோஸ் ஷாட் - அபிதாவைச் சுட்டிக்காட்டி சொல்கிறான்.
குளோஸ் ஷாட் - சேது : இப்ப என்னைப் பொறுத்தவரைக்கும் ஓ.கே.
குளோஸ் ஷாட் - அபிதாவுக்கு ஏதோ புரிந்தது போல் தலைகுனிகிறாள்.
குளோஸ் ஷாட் -சேது : நான் ஓகேதான்... இருந்தாலும் நீ மறைக்கிறே.... ஓகே?
குளோஸ் ஷாட் - அபிதா : இதைப் பாருங்க....
அபிதா ஏதோ சொல்ல முயல...
குளோஸ் ஷாட் - ... அதை காதில் வாங்காமல் பேசுகிறான் சேது.
சேது : ஓகே...ஓகே...ஓகே... நான் ஆம்பள... பட்டுன்னு ஓக்கே சொல்லிட்டேன்... அதே மாதிரி நீயும் ஓ.கே. பண்றது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்...
குளோஸ் ஷாட் - அபிதா முகத்தில் அதிர்ச்சி.
குளோஸ் ஷாட் - சேது : இருந்தாலும் ஓகே பண்றத்துக்கு இவ்வளவு டைம் எடுத்தா... நாம எப்படி ஓகே பண்ணி கரெக்ட் பண்றது...?
குளோஸ் ஷாட் - அபிதா சோகமாக தலை கவிழ்கிறாள்.
குளோஸ் ஷாட் - சேது : ஒருத்தருக்கு ஒருத்தர் ஓகேயானதுக்கு அப்புறம் அப்படியே ஓகே பண்ணிட்டுப் போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதானே...?
குளோஸ் ஷாட் - நண்பர்கள் : ஓகே...ஓகே....
குளோஸ் ஷாட் - அபிதா.
சேது குரல் (Overlap) : இதிலே மறைக்கிறதுக்கு என்ன இருக்கு...
குளோஸ் ஷாட் -சேது : யோசனை...! என்னடா நாம அய்யர் பொண்ணாச்சே... சரியா வருமா..?நம்ம வீட்டிலே ஒத்துக்குவாங்களா...? அதானே...?
குளோஸ் ஷாட் - அபிதாவுக்கு விஷயம் முழுமையாகப் புரிந்து அதிர்ச்சியடைகிறாள்.
குளோஸ் ஷாட் - சேது : நீ ஒண்ணும் கவலைப்படாதே. நான் பார்த்துக்கறேன்....
குளோஸ் ஷாட் - அபிதா அதிர்ந்துபோய் வாயைப் பொத்துகிறாள். கண்களில் கண்ணீர் திரண்டு வருகிறது.
குளோஸ் ஷாட் - சேது : எங்க வீட்டுல ஒரு பிரச்சினையுமில்ல... என்ன எங்க அண்ணன்தான் கடச்சல் பார்ட்டி... ஆனா ரெண்டு நாள் பட்டினி கெடந்தா ஒத்துப்பான்.
குளோஸ் ஷாட் - அபிதா அதிர்ச்சியில் கண்ணீர் வடிக்கிறாள்.
குளோஸ் ஷாட் - சேது : ஆமா, உன் வீட்டுல ஒரு ரெட்ட மண்டையன் இருக்கானே... உங்கப்பன்.. அவன் எந்தப் பிரச்சினையும் பண்ணமாட்டானே...?
குளோஸ் ஷாட் - அபிதா முகத்தில் மேலும் அதிர்ச்சி.
குளோஸ் ஷாட் - சேது : அப்படின்னா சொல்லு... சேர்த்துவச்சு ஒரே அடி... ஹனிமூனெல்லாம் முடிஞ்சு பத்து நாள் கழிச்சுத்தான் எந்திரிப்பான்.
மிட் ஷாட் \ டாப் ஆங்கிள் - சேது. அபிதாவிடம் பேசுகிறான்.
குளோஸ் ஷாட் - அபிதா கண்களில் மிரட்சி.
மிட் ஷாட் - அபிதாவிடம் பேசுகிறான்.
குளோஸ் ஷாட் - அபிதா. மிட் ஷாட் - சேது. அபிதாவிடம் விளக்கிக் கொண்டிருக்கிறான். வசனங்கள் இல்லாமல் பின்னணியில் இசை மட்டும் சத்தமாக ஒலிக்கிறது.
குளோஸ் ஷாட் - சேது : என்ன... சரிதானே-
குளோஸ் ஷாட் - அபிதா சரேலென நிமிர்கிறாள்.
சேது : ஓகே?
குளோஸ் ஷாட் - குழப்பத்தில் இருக்கும் அபிதா 'ஓகே' என்பதுபோல் தலையாட்டுகிறாள். குளோஸ் ஷாட் -சேதுவின் நண்பர்கள் முகத்தில் வெற்றிப் பெருமிதம். மிட் ஷாட் - அபிதாவைப் பார்த்தபடிப் போகிறான் சேது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், நண்பன், கொஞ்சம், மாதிரி, இருக்கும், பேசுகிறான், நண்பர்கள், சேதுவின், தலையாட்டுகிறாள், கண்களில், முகத்தில், கரெக்ட், ஒண்ணும், அபிதாவிடம், அதிர்ச்சி, நீயும், ஆங்கிள், சத்தம், இருக்கு, மிரட்சி, overlap, இன்னொரு, வெளியே, பார்க்கிறாள், எப்படி, தலைகுனிகிறாள், இருந்தாலும்