சேது - காட்சி 18 - பகல் - INT./ சேது வீடு
குளோஸ் ஷாட் - 'வாசுதேவன் மாஜிஸ்ட்ரேட்' என்ற போர்டு.
மிட் ஷாட் - சேதுவின் அண்ணன் பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறார். சேது ஷீவுக்குப் பாலீஷ் போட்டுக்கொண்டிருக்கிறான்.
சேது : அண்ணி...
சத்தமாக அண்ணியை அழைக்கிறான்.
அண்ணி : என்னப்பா...?
என்று கேட்டுக்கொண்டு வந்த அண்ணியின் மேல் சாக்ஸை வீசுகிறான் சேது.
சேது : சாக்ஸ் துவைக்கலே...பொறுப்புங்கறது இந்த வீட்டுல யாருக்கும் கிடையாது...என்ன பண்றா அவ...?
அப்போது வாசலில் சேதுவை நண்பன் அழைக்கும் குரல் கேட்கிறது.
நண்பனின் குரல்(Overlap) : சிய்யான்... சிய்யான்...
சேது : போய் வரேன்னு சொல்லு போ
குளோஸ் ஷாட் - அண்ணி போகிறாள். வாசலில் மோட்டார் பைக்கில் காத்திருக்கிறான் சேதுவின் நண்பன்.
அண்ணி : சிய்யான் இல்ல...?
அண்ணி : இருக்கான் உட்கார்...
சொல்லிவிட்டு உள்ளே போன அண்ணி நண்பன் குரல் கேட்டு திரும்புகிறாள்.
நண்பன் : பெரிய சிய்யான் இல்லயே?
குளோஸ் ஷாட் - அண்ணி : அடி செருப்பால... இந்த சிய்யான், கிய்யான் எல்¡ம் அவனோட வச்சுக்க, இவரை ஏண்டா வம்புக்கு இழுக்கறே... தறுதலைப்பய...
குளோஸ் ஷாட் - சோகமாகிறான் நண்பன்.
குளோஸ் ஷாட் - அண்ணி : உட்கார்.
குளோஸ் ஷாட் - மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு உள்ளே வந்து உட்காருகிறான் நண்பன்.
மிட் ஷாட் - அண்ணி : காபி ஊஏதாவது சாப்பிடுறியா..?
நண்பன் : ஒண்ணும் வேணாம்.
அண்ணி : என்னடா இவன் ஆளே மாறிப்போயிட்டான்...
குளோஸ் ஷாட் - அண்ணி : காலங்காத்தாலே குளிச்சி ரெடி ஆயிடுறான். கண்ணாடி முன்னாடி நின்னு மணிக்கணக்கா தலைசீவுறான். அர்த்த ராத்திரியிலே எந்திரிச்சு அழுக்குப் பெட்டியை வேற உருட்டறான்... எதையாவது சொல்லிக் கொடுத்து விட்டுறாதீங்கடா...
நண்பன் : அடடாடா...அவர் அப்படியே பச்சைப் புள்ள... நாங்க கெடுக்கப் போறோமாக்கும். எல்லாம் லவ் பண்ணா ஆரம்பிச்சா அப்படித்தான்.
குளோஸ் ஷாட் - அண்ணி : லவ் பண்றானா...? யாருடா அது...?
குளோஸ் ஷாட் - நண்பன் : உங்களுக்குத் தெரியாதாக்கும்...? அவ இங்கே வந்தப்போ காபி கீபி எல்லாம் போட்டுக்கொடுத்து விருந்து உபசாரமெல்லாம் பலமா இருந்துச்சே... அப்புறம் எங்கிட்டே கேட்டா...?
குளோஸ் ஷாட் - அண்ணி : ஆ...! அதான் அவன் அவ்வளவு பந்தா பண்ணானா...? அதுல யாரு? ரெண்டு பேர்ல இங்க வந்தாளுக...
குளோஸ் ஷாட் - நண்பன் : ஒண்ணுமே தெரியாத மாதிரி உட்கார்ந்து இருந்தாளே... ஒரு ஊமைக்கத்தாழ... அவ...
அண்ணி : ஊமைக்கத்தாழயா...?
நண்பன் : அவன் அப்பன் கூட பெரிய கோயில்ல பூசாரியா இருக்கானே...?
குளோஸ் ஷாட் -அண்ணி : பூசாரியா...?
குளோஸ் ஷாட் - நண்பன் : ஒரு அரை மண்டையன் கோயில்ல மணி ஆட்டிக்கிட்டு திரிய மாட்டான்...? அவன் மக...
குளோஸ் ஷாட் - அண்ணி : டேய்... வயசுலே மூத்தவங்கன்னு ஒரு மரியாதை வேணாம்? எல்லாரையும் சகட்டு மேனிக்கு அவன் இவன்கிறது...
குளோஸ் ஷாட் -நண்பன் : அது சரி... சம்பந்தியா? அண்ணி...
மிட் ஷாட் - அவன் தலையில் அண்ணி செல்லமாகக் கட்டுகிறாள். அங்கே சேது வருகிறான்.
சேது : டேய் கிளம்பு. (அண்ணியிடம்...) சில்லறை இருந்தால் ஒரு நூறு ரூபா கொடு...
நண்பன்: நூறு ரூபாயே சில்லறையா...?
முந்தானையை அவிழ்த்து பணத்தை எடுத்துக் கொடுக்கிறாள் அண்ணி.
சேது : ஐநூறா இருக்கு...
அண்ணி : பரவாயில்ல வச்சுக்கோ...
சேதுவும் நண்பனும் போகின்றனர். அண்ணி அவர்கள் போவதைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாள். திரும்பி உள்ளே போகிறாள்.
நண்பன் குரல் (Overlap) : ம்... எங்கப்பன் இருக்கானே... டெய்லி அந்த முப்பது ரூபாவுக்கு மேல நகர்த்த மாட்டேன்கிறான். மச்சக்காரண்டா நீ...
மிட் ஷாட் -அண்ணன் : நீ பாத்தியா...?
குழந்தை : சதியமா பார்த்தேன்பா...
சேதுவின் அண்ணன் தலையில் கை வைத்து குழந்தை சத்தியம் செய்யும்போது அண்ணி வருகிறாள்.
அண்ணி : ஏய் போடி... போய்யூனிபார்ம் போட்டுக்க... போ...
குழந்தையை அதட்டுகிறாள்.
குழந்தை: எல்லாம் எங்களுக்குத் தெரியும்...
என்று முனகியபடி குழந்தை செல்கிறது.
அண்ணன்: எதுக்கு அவனுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தே...? அவன் பண்ற சேட்டையெல்லாம் பத்தாதா...?
அண்ணி: இனிமே அவன் அப்படியெல்லாம் பண்ண மட்டான்...
குளோஸ் ஷாட் - அண்ணன்: அப்படின்னு உன்கிட்டே சொன்னானா...?
மிட் ஷாட் -அண்ணி, அண்ணன்
அண்ணி: ஐயோ...அவன் லவ் பண்றாங்க...
குளோஸ் ஷாட் - அண்ணன்: அய்யோப்பா! இப்ப அதை ஒண்ண ஆரம்பிச்சிட்டானா... இது எங்க போய் முடியுமுன்னு தெரியலையே! என்னடி இது!
குளோஸ் ஷாட் - அண்ணி: இந்தப் பாருங்க... அப்படியெல்லாம் பேசாதீங்க. யார் தெரியுமா அது...?
அண்ணன்: சொன்னாத்தானே தெரியும்...
அண்ணி: அன்னைக்குக் கோயில்ல பார்த்தோமே... அய்யர் பொண்ணு... இங்கே கூட வந்திருந்தாளே...?
குளோஸ் ஷாட் -அண்ணன் யோசிக்கிறார்.
மிட் ஷாட் - அந்தப் பொண்ணுதான். ஒரு ஜாடைக்கு செத்துப்போன என் தங்கச்சி மாதிரி இருக்கிறா...
குளோஸ் ஷாட் -அண்ணன்: எப்படி இந்த மூணு வயசுலே செத்துப்போனான்னு சொன்னியே... அந்தத் தங்கச்சி மாதிரி... சரிதாண்டி.
மிட் ஷாட் - அண்ணி: என்னங்க அந்தப் பொண்ணைப் பத்தி நீங்க என்ன் நினைக்கிறீங்க...?
அண்ணன்: நினைக்குறதுக்கு என்ன இருக்கு? பாவம் அந்தப் பொண்ணு என்ன பாடு படுத்துறானோ...
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், நண்பன், அண்ணன், சிய்யான், குழந்தை, அந்தப், கோயில்ல, மாதிரி, எல்லாம், சேதுவின்