சேது - காட்சி 17 - அதிகாலை - EXT./ அக்ரஹாரம்
குளோஸ் ஷாட் - அக்ரஹாரத் தெரு.
மிட் ஷாட் -பாட்டி, பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருக்கின்றனர். அபிதாவின் அக்கா கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கிறாள். அப்போது ஒரு வயதான மாமி புலம்பியபடி வருகிறாள்.
மாமி : இந்த பாழாப் போன வாய்வு இடுப்புலே வந்து உட்கார்ந்துகொண்டு போவேனான்னு அழிச்சாட்டியம் பண்றது... அதுக்காக ஜலம் எடுக்காம இருக்க முடியறதோ...?
மிட் ஷாட் - அபிதாவின் அக்கா : ஏன் மாமி, நான் இறைச்சுத் தர மாட்டேனா...?
மாமி : நோக்கு ஏண்டியம்மா சிரமம்...?
அக்கா : பரவாயில்ல மாமி... இதெல்லாம் ஒரு உதவி...
குளோஸ் ஷாட் -இன்னொரு மாமி: இரு...இரு...இரு... நான் சொல்றேன்... மனுஷாளுக்கு மனுஷாள் ஒரு உதவி அதானே...?
மிட் ஷாட் - 'ம்' என்று தலையாட்டிய அபிதாவின் அக்கா தண்ணீர் இறைக்கிறாள்.
மாமி : இந்தக் காலத்துச் சிறுசுகளுக்கு பெரியவா சின்னவாங்குற மரியாதையே தெரியுறதில்லே... நீ தேவலாண்டியம்மா...
அக்கா : ஏன் மாமி... உங்க மூத்த பையன் எல்.ஐ.சியிலேதானே வேலை பார்க்கறா...
மாமி : ஆமா... ஆமா... ஆறு வருஷமாச்சு. சாதாரண ஏஜெண்டா ஜாயிண்ட் பண்ணினான். வருஷத்துக்கு ஒரு பிரமோஷன் ஏறி, இப்ப ஜோனல் ஆபீசரா இருக்கான்... பி.எஃப்., இந்தப் பிடித்தமெல்லாம் போக மாசம் செவன் தவுசன் சம்பளம் வாங்குறான்.
குளோஸ் ஷாட் -பெண்கள்.
குளோஸ் ஷாட் - அக்கா : அங்கே லோன் எல்லாம் தருவாளாமே...
குளோஸ் ஷாட் - மாமி : ம்... ஹவுசிங் லோன்...ஹாஸ்பிட்டல் லோன்... எஜூகேஷன் லோன்...ஏன் கல்யாணம் பண்றதுக்குப் பிரச்சனையில்ல... இப்ப அதுக்கெல்லாம் கூட லோன் தர்றாளாம்.
குளோஸ் ஷாட் - அக்கா : அப்ப கல்யாணத்துக்கப்புரம் ஏதாவது பிரச்சனை வந்தாக்கூட லோன் தருவாளா..?
குளோஸ் ஷாட் - மாமி : என்னடி சொல்றே...?
அக்கா : இல்ல, உங்க பையன்கிட்டே சொல்லி ஒரு நாற்பது ஆயிரம் லோன் வாங்கித் தர்றேளா..? கைமாத்தாத்தான் மாமி..
குளோஸ் ஷாட் -அக்கா: ...நேக்கு என் குழந்தை ஞாபகமா இருக்கு...
மிட் ஷாட் - மாமி : நன்னா கேட்டே போ... நேக்கு இடுப்பு வலி போய் நெஞ்சு வலியே வந்துடுச்சு..
அங்கிருக்கும் பெண்கள் சிரிக்கிறார்கள்.
ஒரு பெண் குரல் (Overlap) :நான் சொல்லல...
குளோஸ் ஷாட் - பெண்கள் கிண்டல் செய்வது கேட்டு அழுகிறாள் அக்கா.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், பெண்கள், அபிதாவின்