முதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது
»
காட்சி - 16 பகல் - EXT. கல்லூரி செல்லும் பாதை
சேது - காட்சி - 16 பகல் - EXT. கல்லூரி செல்லும் பாதை
லாங் ஷாட் - பாலத்தில் மாணவ, மாணவிகள் வருகின்றனர். மிட் ஷாட் - இரயில்வே டிராக்கை ஒட்டிய இடத்தில் நண்பர்களுடன் அமர்ந்திருக்கிறான் சேது.
குளோஸ் ஷாட் - நண்பன் : சாமி...ம்...
கஞ்சா சிகரெட்டை மற்றொரு நண்பரிடம் நீட்டுகிறான்.
மிட் ஷாட் - இன்னொரு நண்பன் : டேய்... வேண்டாம்... அப்புறம் பழக்கம் ஆகிடும்...
நண்பன் : டேய், நாயே... அவன் குடிக்கிறதை ஏன்டா கெடுக்கிற....?
மிட் ஷாட் -அபிதா வருகிறாள்.
நண்பன் : அது சரி.
என்றவன் திரும்பிப் பார்க்கிறான். அபிதா தன் தோழியுடன் வருகிறாள்.
நண்பன் : வாம்மா கொடுக்கு...
கிண்டல் செய்த நண்பனை அடக்கிய சேது அபிதாவைப் பார்க்கிறான். அபிதா நிற்கிறாள்.
குளோஸ் ஷாட் - சேது : பரீட்டை எல்லாம் எழுதியாச்சா...?
குளோஸ் ஷாட் - அபிதா : தேங்க்ஸ்
குளோஸ் ஷாட் - சேது : மார்க், கீர்க் ஏதாவது குறைஞ்சாக் கூட சொல்லு, நான் பார்த்துக்கறேன்...
குளோஸ் ஷாட் - தோழி : ம்...
குளோஸ் ஷாட் - சேது : அது உனக்கு இல்லை... இங்க....
என்று அபிதாவைக் காட்டுகிறான். குளோஸ் ஷாட் - தோழியைப் பார்க்கிறாள். அபிதா. மிட் ஷாட் - 'போய் வருகிறேன்' என்பது போல் தலையாட்டிவிட்டுப் போகிறாள் அபிதா.
லாங் ஷாட் - நண்பன் : எதுக்கு சிய்யான் தேங்க்ஸ் சொல்லிட்டுப் போறாளுக?
சேது : ஹால் டிக்கெட்டைத் தொலைச்சுட்டாளாம். காலையிலே போய் சொன்னேன்... அதான்.
நண்பன் : அதென்ன... படிக்கிற புள்ளைக பொறுப்பு இல்லாமே ஹால் டிக்கெட்டைத் தொலைக்கிறது...?
எந்ற நண்பன், 'மாமி' என்று அபிதாவை அழைக்க, அவனை அடித்துக் கீழே தள்ளுகிறான் சேது. இன்னொரு நண்பன் சிரிக்கிறான்.
மிட் ஷாட் -நண்பன் : அப்படிப்போடு...!
சேது : சேட்டையா...? பாவம் நல்ல புள்ளை... அதைப் போய்ட்டு...
சேதுவின் மாற்றத்தைக் கவனித்து நண்பன் கேட்கிறான்.
நண்பன் : நல்ல புள்ளையா...? என்னடா ஒரு டைப்பா பேசுறே...
சேது : என்ன டைப்பு? அதெல்லாம் ஒண்ணுமில்ல.
குளோஸ் ஷாட் - அடிவாங்கிய நண்பனின் சட்டையை இன்னொரு நண்பன் சரி செய்கிறான்.
மிட் ஷாட் - சேது : என்ன மாதிரி பாட்டு படிக்கிறா தெரியுமாடா?
நண்பன் : யாரு?
சேது : அதான் மாமி!
குளோஸ் ஷாட் -நண்பன் : உனக்கெப்படித் தெரியும்...?
மிட் ஷாட் - சேது : இல்ல... கோயிலுக்குப் போயிருந்தேன்....
குளோஸ் ஷாட் - நண்பன் : கோயிலுக்கு எல்லாம் போக ஆரம்பிச்சாச்சா...?
தனக்குள் சொல்லிக்கொள்கிறான்.
நண்பன் : இதுல ஆச்சரியப்படுறதுக்கு என்னப்பா இருக்கு...?
மிட் ஷாட் -நண்பன் : ...அய்யர் வீட்டுப் பொண்ணுங்க எல்லாருமே நல்லாத்தான் பாடுவாங்க... என்ன சாமி...
இன்னொரு நண்பனிடம் கேட்கிறான்.
இன்னொருவன் : ஆமா... எங்காத்துலே எங்க பாட்டிக்கூட நன்னாப் படிக்கும்.
குளோஸ் ஷாட் - சேது : அதாவது பரவாயில்லை... இந்த முறுக்கில்ல...
குளோஸ் ஷாட் - நண்பன் : என்னது....?
மிட் ஷாட் - சேது : முறுக்குடா... நெய் முறுக்கு... அது அவளே சுட்டுருக்கா... அது அவ்வளவு டேஸ்ட்டா இருக்குடா
குளோஸ் ஷாட் - நண்பன் : அப்படியா... பரவாயில்லையே,
கிண்டலாக மற்றவனிடம் கேட்கிறான்.
நண்பன் : உங்க கிழவிக்கு முறுக்கு சுடத் தெரியுமா...?
குளோஸ் ஷாட் - அந்த நண்பன் 'ம்' என்று தலையாட்டுகிறான்.
நண்பன் : என்ன சிய்யான், எண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு. செக்கெண்ட் ஷோ படத்துக்குப் போயிருந்தியா...?
சேது : இல்லைடா... ராத்திரி மூணு மணி வரைக்கும் தூக்கம் இல்லடா...
நண்பன் : உடம்பைப் பார்த்துக்கடா... வர வர ரொம்ப மெலிஞ்சுட்டேப் போற... நீ சரியாச் சாப்பிடுறியா இல்லையா...?
சேது : எனக்குப் பசிக்கவே மாட்டேங்குதுடா...
சேது சொன்னதும் நண்பன் முகத்தில் சிரிப்பு.
நண்பன் : மாட்டிக்கிட்டியே... சிய்யான்... மாட்டிக்கிட்டியே...
மிட் ஷாட் - ராகம் போட்டு ஒப்பாரி வைக்கிறான் நண்பன். மற்றவர்கள் அவர்களை வேடிக்கை பார்க்கிறார்கள்.
மாமி விரிச்ச வலையிலே நீ... மாட்டிக்கிட்டியே...
சேது : டேய் அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல...
மிட் ஷாட் - நண்பன் : அய்யய்யோ, வெட்கப்படுறாண்டா... டேய் வெட்கப்படுறாண்டா... அருமை பெருமையா உன்னை வளர்த்தமே...
எங்கு தேசிங்கு ராசா... இப்படி அக்ரகாரத்திலே போய் வாக்கப்படப் போறியே...
சேது : அடச் சீ...
இன்னொரு நண்பன் : டேய்... சும்மா எதையாவது சொல்லி அப்புறம் சட்டையை கிழிச்சுட்டு அலைய விட்டுறாதே... அவங்க மனசுலே என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க வேணாமா...?
நண்பன் : மாமி மனசிலே ஒண்ணும் இல்லாமத்தான் பாட்டுப் பாடி முறுக்கு சுட்டுக் கொடுத்தாளாக்கும்... போடா...
குளோஸ் ஷாட் - சேது : அப்போ அதான்கிறியா....?
குளோஸ் ஷாட் - நண்பன் : அதேதான்...
குளோஸ் ஷாட் - நண்பன் : என்ன... அழகழகா எவ்வளவோ அய்யர் பொண்ணுங்க எல்லாம் இருக்காங்க... அதுங்களை எல்லாம் விட்டுப்புட்டு.. அதுக்குத்தான் காதலுக்குக் கண் இல்லேங்கிறாங்களோ...?
குளோஸ் ஷாட் - சேது : என்னது...?
குளோஸ் ஷாட் - நண்பன் : ஒண்ணுமில்ல.... இனிமே ஆட்டுக்கறி... அயிர மீன் எல்லாம் மறந்திர வேண்டியதுதான்டி.
குளோஸ் ஷாட் - சேது சிரிக்கிறான்
குளோஸ் ஷாட் - நண்பன் சிரிக்கிறான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - நண்பன், குளோஸ், எல்லாம், இன்னொரு, முறுக்கு, மாட்டிக்கிட்டியே, ஒண்ணுமில்ல, சிய்யான், சிரிக்கிறான், கேட்கிறான்