முதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது
»
காட்சி 12 - பகல் - EXT. / INT. - அபிதா வீடு.
சேது - காட்சி 12 - பகல் - EXT. / INT. - அபிதா வீடு.
லாங் ஷாட் - டாப் ஆங்கிள் - குதிரை வண்டி வருகிறது. அபிதாவின் வீட்டு வாசலில் நிற்கிறது அதிலிருந்து அபிதாவின் அக்கா இறங்குகிறாள் வீட்டுக்குள்ளிருந்து அபிதா 'அக்கா' என்றபடி ஓடிவருகிறாள்.
குளோஸ் ஷாட் - அபிதா : அக்கா.கண்ணன் வரல...?
பதில் சொல்லாமல் அழுதபடி வீட்டுக்குள் ஓடுகிறாள் அக்கா. புரியாமல் பார்க்கிறாள் அபிதா. குளோஸ் ஷாட் - அபிதாவின் அக்கா அழுகிறாள். அருகில் அபிதா. மிட் ஷாட் - அழுகின்ற அக்காவைத் தேற்றியபடி அபிதா அமர்ந்திருக்க அருகில் அம்பி நிற்கிறான். குருக்கள் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.
குருக்கள் : நாலாயிரம் ஐயாயிரம் போயி இப்போ நாற்பது ஆயிரத்திலே வந்து நிற்குறாரோ... பேஷ்... ரொம்ப நன்னா இருக்கு. இதோ பாரும்மா, உன் தோப்பனார் ஒண்ணும் டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் இல்ல... சாதாரண... குருக்கள். அதை மனசுலே வச்சுண்டு பேசு.
குளோஸ் ஷாட் - அக்கா : அவா கேப்பா எவ்வளவு வேணாலும். நம்ம ஆத்துல அதெல்லாம் முடியாதுன்னு நோக்கு மட்டும் தெரியாதா?
அழுகிறாள்.
குளோஸ் ஷாட் - குருக்கள் : தெரிஞ்சுண்டே என் பிராணனை வாங்கணுமுன்னு வந்து நிக்கிற போல இருக்கு...
கண் கலங்குகிறார். குளோஸ் ஷாட் - அபிதா கலக்கத்துடன் அப்பாவைப் பார்க்கிறாள். அருகில் அழுதபடி அக்கா.
குளோஸ் ஷாட் - சஜஷன் குருக்கள்
அம்பி : சரி மாமா, நம்ம மேலே என்ன தப்பிருக்கு? அதுதான் கொடுக்க வேண்டியது எல்லாம் கொடுத்து முடிச்சாச்சே... இப்போ பணத்துக்காக பெத்தவகிட்டேயிருந்து பிள்ளையைக் கூடவா பிடுங்கிண்டு அனுப்புவா...? இதை இப்படியே விடக் கூடாது. ரெண்டுலே ஒண்ணு கேட்டுறணும்.
குளோஸ் ஷாட் - அக்கா : வேண்டாம். நான் ஒரு முடிவோடத்தான வந்திருக்கேன். குளோஸ் ஷாட் – குருக்கள் அதிர்ச்சியாக நிமிர்கிறார்.
குளோஸ் ஷாட் - அக்கா : எனக்கு இப்படிப்பட்ட மனுஷனோட குடித்தனம் பண்ண என்னாலே முடியாது.
குளோஸ் ஷாட் -குருக்கள் முகத்தில் அதிர்ச்சி.
குளோஸ் ஷாட் - அக்கா: இங்கேயே இருந்து உனக்கு சிசுருட்ஷை பண்ணி புண்ணியமாவது தேடிக்கிறேன்.
குளோஸ் ஷாட் -குருக்கள் முகத்தில் அதிர்ச்சி.
குளோஸ் ஷாட் - அக்கா : ஒரு பத்து நாள்ல நானே பணத்தை ஏற்பாடு பண்ணி... அவா முகத்திலே வீசி எறிஞ்சிட்டு என் பிள்ளையை நான் அழைச்சுண்டு வந்துறப்போறேன்.
குளோஸ் ஷாட் - குருக்கள் : இங்க யாரண்ட நீ கேட்க முடியும்...?
குளோஸ் ஷாட் - அக்கா : கேட்போம்... கேட்டுத்தான் பார்ப்போம். மனுஷாளுக்கு மனுஷா உதவி செய்ய மாட்டாளா என்ன...?
குளோஸ் ஷாட் - குருக்கள் : ஆ...:கேட்டவுடனே கொடுத்துட்டுத்தான் மறுவேலை பாப்பா...
மிட் ஷாட் - குருக்கள் : எல்லாம் என்தலையெழுத்து
குருக்கள் நொந்துகொண்டே எழுந்து போகிறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், குருக்கள், அருகில், அபிதாவின்