மருதகாசி பாடல்கள் - பக்கம் - 99

ஆல மரத்துக்கிளி! ஆளைப்பார்த்துப் பேசும் கிளி! வால வயசுக் கிளி!-மனம் வெளுத்த பச்சக்கிளி!-மனம் வெளுத்த பச்சக்கிளி! முத்து முத்தா பனித்துளியாம்! முகம் பார்க்கும் கண்ணாடியாம்! கொத்துக் கொத்தாப் பழக்குலையாம்! குமரிப் பெண்ணின் முன்னாடியாம்! புள்ளையில் உசந்த புள்ளே! பூமியிலே என்ன புள்ளே?-அது வள்ளலாட்டம் உள்ளதெல்லாம் வாரி வழங்கும் தென்னம் புள்ளே! வாழையடி வாழையாக வாழணுமின்னு வாழ்த்துறதுலே இருக்கு தத்துவம் ஒண்ணு! தாய்மையின் தியாகச் சின்னம் தானேயின்னு-குலை தள்ளி வாழை ஒண்ணு சொல்லுது நின்னு! நீர் இருந்தா ஏர் இருக்கும்! ஏர் இருந்தா ஊர் இருக்கும்! ஊர் இருந்தா உலகத்திலே எல்லாம் இருக்கும்! உண்மையோடு நன்மை எல்லாம் நல்லா செழிக்கும்! |
பாலாபிஷேகம்-1977
இசை : சங்கர், கணேஷ்
பாடியவர் : P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 97 | 98 | 99 | 100 | 101 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 99 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - இருக்கும், இருந்தா, புள்ளே