மருதகாசி பாடல்கள் - பக்கம் - 90
ஆண் : காயிலே இனிப்பதென்ன? கனியானால் கசப்பதென்ன? வாயாடி வம்பு பேசும் மானே! பதில் சொல்லு! பெண் : காலத்தின் கோலத்தினால் கட்டழகு குலைவதினால் எட்டிக் கனியாக ஆண்கள் எண்ணும் பெண்ணினந்தான்! ஆண் : நீலமாய்த் தெரிவதென்ன? நீர் வீழ்ச்சி யாவ தென்ன? நிமிர்ந்தே என்னைப் பார்த்து நேரான பதில் சொல்லு! பெண் : நெஞ்சிலே அனுதினமும் கொஞ்சும் இன்ப துன்ப மெனும் நிலையைக் காட்டுகின்ற பெண்களின் கண்கள்தான்! ஆண் : பிரிந்தால் கனலாகி நெருங்கி நின்றால் பனியாகி கருத்தில் விளையாடக் காணும் பொருளென்ன? பெண் : இரண்டு இதயங்களை இவ்வுலகில் ஒன்றாக்கி என்றும் அழியாமல் வாழும் உண்மைக் காதல் தான்! இருவரும்: தெய்வீகக் காதலினால் சேர்ந்து விட்டோம் ஆனதினால் சிங்கார கானம் பாடி வாழ்வோம் நாம் இனிமேல்! |
மனமுள்ள மறுதாரம்-1958
இசை : K. V. மகாதேவன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 88 | 89 | 90 | 91 | 92 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 90 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண்