மருதகாசி பாடல்கள் - பக்கம் - 89
வஸந்தன் : வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ? மீனா : அன்புக் கணவனின் முன்னாலே மனைவி அழகாகச் சிந்தும் புன் சிரிப்பு! வஸந் : நெஞ்சம் ஒன்றாகி எந்நாளும் இன்பம் பெறவே சொந்தம் கொண்டாடச் செய்யும் புதுப்பூ என்ன பூ? மீனா : உண்டான ஆசை தன்னைச் சொல்லாமல் சொல்லி உள்ளம் ரெண்டைச் சேர்க்கும் நாலு கண்ணின் சந்திப்பு! (வண்டு) வஸந் : உள்ளம் ஒன்றான பின்னாலே உருவெடுத்து தொல்லை தந்தாலும் இன்பம் தரும் பூ என்ன பூ? மீனா : எல்லோரும் இணையேதும் இல்லாத செல்வம் என்றே சொல்லும் பிள்ளைச் செல்வம் செய்யும் குறும்பு (வண்டு) |
எங்கள் குலதேவி-1959
இசை : K. V. மகாதேவன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 87 | 88 | 89 | 90 | 91 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 89 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - மீனா, என்ன, வண்டு