மருதகாசி பாடல்கள் - பக்கம் - 88
ஆண் : யாருக்கு யார் சொந்தமென்பது-என்னை நேருக்கு நேர் கேட்டால் நானென்ன சொல்வது? வாரி முடித்த குழல் எனக்கே தான் சொந்த மென்று வானத்துக் கார் முகிலும் சொல்லுதே? மலர்ந்து விளங்கும் முகம் எங்களின் இனமென்று வண்ண மலரெல்லாமே துள்ளுதே-இதில் (யாருக்கு) பெண் : வண்ண மலர் என்றும் வண்டுக்குத் தான் சொந்தம்! வழங்கிடும் மதுவாலே இரண்டுக்கும் ஆனந்தம்! ஆண் : தந்தப்பல் எழில் கண்டு, தன் இனந்தான் என்று பொங்கும் வெண்முத்து பண்பாடுதே! குங்கும இதழ் கண்டு கோவைக் கனி எல்லாம் தங்களின் இனமென்று ஆடுதே-இதில் (யாருக்கு) பெண் : கொத்தும் கிளிக்கே தான் கோவைக்கனி சொந்தம்! குறிப்பாக உணர்த்தலாம் வேறென்ன சொல்வது? (யாருக்கு) |
சபாஷ் மாப்பிள்ளை-1961
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 86 | 87 | 88 | 89 | 90 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 88 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - யாருக்கு, தான்