மருதகாசி பாடல்கள் - பக்கம் - 87
பெண் : ஒடுகிற தண்ணியிலே ஒறச்சு விட்டேன் சந்தனத்தை சேந்துதோ?... சேரலையோ?... செவத்த மச்சான் நெத்தியிலே...! ஆண் : சந்தனப் பொட்டு வச்சு சொந்த மச்சான் வந்திருக்கேன்! சந்தோஷமாக நீயும் வந்து சேரு இக்கரைக்கு! பெண் : இக் கரையில் நானிருக்க அக் கரையில் நீ யிருக்க இருவரையும் பிரிக்க இடையில் இந்த ஆறிருக்கு! ஆண் : ஆறாலும் நம்மைப் பிரிக்க ஆகு மோடி மத்தியிலே! ஆசையுள்ள பெண் மயிலே பாரு வாறேன் பக்கத்திலே! பெண் : பக்கத்திலே வந்தவுடன் பாச முள்ள எம் மனசு சொக்காமல் சொக்கிடுது சுத்திச் சுத்தி ஆடிடுது! பக்குவமா நேரம் பார்த்துப் பாட்டுப் பாட வந்த மச்சான்!-என் சொந்த மச்சான் வெக்கமா இருக்குதுங்க விலகிக் கொஞ்சம் போங்க மச்சான்! ஆண் : வெக்கத்தையும் மூட்டை கட்டி கக்கத்திலே வச்சுக் கிட்டு வில்லாக வளைஞ்சு ஆடு டப்பாத் தாளம் போட்டுக்கிட்டு வில்லாக வளைஞ்சு ஆடு டப்பாத் தாளம் போட்டுகிட்டு |
பிள்ளைக்கனியமுது-1958
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 85 | 86 | 87 | 88 | 89 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 87 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - மச்சான், பெண்