மருதகாசி பாடல்கள் - பக்கம் - 8

தன்னிகரற்ற இன்னிசைக் கவிஞர்
"பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா" |
-என்று புத்துலகக் கவி பாரதியார் அன்று பாட்டின் பெருமையை வியந்து, பாராட்டிப் பாடினார். இன்று அந்த வரிகளுக்கு விளக்கமாக, தமிழ்த் திரையுலகில் முடி சூடாப் பெருங்கவியாக விளங்கி வருகின்ற மதிப்பு மிகு அண்ணன் மருதகாசி அவர்களின் பாடல்கள் விளங்குகின்றன. ஒரு காலத்தில் தமிழ்த் திரைப் பாடல்கள் இலக்கியமாக முடியுமா? என்ற வினா எழுந்ததுண்டு. அதற்கு, முடியும் என்று தங்களுடைய ஆற்றலால், அரிய படைப்புகளால் விடையளித்த கவிஞர்களில் குறிப்பிடத் தகுந்தவர், பெருங்கவிஞர் மருதகாசி அவர்கள் என்றால் மிகை இல்லை. அதற்குச் சான்றாக அவரின் இந்தத் திரைப்படப்பாடல் தொகுப்பு விளங்குகிறது. நான் சின்னஞ் சிறுவனாக உலவிய போது, செந்தமிழை உண்டு களிக்கக் கள் வெறி கொண்டு திரிந்த போது, பாடி மகிழ்ந்த பாடல்களிலே அண்ணன் மருதகாசி அவர்களின் பாடல்கள் முன்னிடம் பெற்று இருந்தன.
"வாராய் நீ வாராய்! போகுமிடம் வெகுதூரமில்லை நீவாராய்" "மனுஷனை மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே!-இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே!" "உலவுந் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே!" "கண்வழி புகுத்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மெளனம்? வேறெதிலே உந்தன் கவனம்?" "மாசிலா உண்மைக் காதலே! மாறுமோ செல்வம் வந்த போதிலே!" "தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா?" "இதுதான் உலகமடா! - மனிதா இதுதான் உலகமடா! - பொருள் இருந்தால் வந்து கூடும்! - அதை இழந்தால் விலகி ஓடும்!" "ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே! வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே" |
என்று இப்படி எண்ணற்ற பாடல்களை என் இதயத்தேரில் ஏற்றி, ஊர்வலம் வந்த அந்த நாட்களை இன்று நினைத்தாலும் என் நெஞ்சில் இனிமை சுரக்கிறது.
"மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயல் காட்டை உழுதுபோடு சின்னக்கண்ணு!-பசுந் தழையைப் போட்டு பாடுபடு செல்லக்கண்ணு" |
போன்ற பாடலும்,
"ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமேயில்லே! என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமேயில்லே!" "தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்! தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்!" "விவசாயி! விவசாயி! கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி! விவசாயி!" |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 8 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - விவசாயி, பாடல்கள், மருதகாசி