மருதகாசி பாடல்கள் - பக்கம் - 75
மியாவ்! மியாவ்! மியாவ்! மியாவ்! பூனைக்குட்டி! வீட்டைச் சுத்தும் பூனைக்குட்டி! அத்தான் மனசு வெல்லக்கட்டி-அவர் அழகு எப்படி சொல்லுகுட்டி! அங்கமெல்லாம் பளபளக்கும் தங்க நிறம் என்பது போல் - அவரின் திருவுருவம் தகதகன்னு ஜொலிக்குமா? அந்தமுள்ள சந்திரனை உவமை சொல்வது போல்-யாரும் ஆசை கொள்ளும் வண்ணம் மலர்முகமும் இருக்குமா? (மியாவ்) செங்கரும்பாய் இனித்து!-அவர் சொல்லும் என்னை மயக்கிடுதே! சிரிப்பும் அதைப் போல எனை மயங்கச் செய்யுமா? பொங்கி எழும் ஆவலினால் மங்கை நான் கேட்கிறதை புரிந்துகொண்டு பதில் எனக்கு சொல்ல உனக்குத் தெரியுமா? |
குமுதம்-1961
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 73 | 74 | 75 | 76 | 77 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 75 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - மியாவ்