மருதகாசி பாடல்கள் - பக்கம் - 71

ஆண் : சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு-சின்னச் சிட்டு உன் பார்வை மின் வெட்டு! பெண் : சிங்காரக் கைகளில் என்னைக் கட்டு! நெஞ்சைத் தொட்டு! உன் அன்பை நீ கொட்டு! (சித்) ஆண் : இது காதல் நாடக மேடை! பெண் : விழி காட்டுது ஆயிரம் ஜாடை! ஆண் : இங்கு ஆடலுண்டு! பெண் : இன்பப் பாடலுண்டு ஆண் : சின்ன ஊடலுண்டு! பெண் : பின்னர் கூடலுண்டு! (சித்) ஆண் : மது உண்டால் போதையைக் கொடுக்கும்! பெண் : அந்த மயக்கம் காதலில் கிடைக்கும்! ஆண் : தன்னைத் தான் மறக்கும்! பெண் : அது போர் தொடுக்கும்! ஆண் : இன்ப நோய் கொடுக்கும்! பெண் : பின்பு ஒய்வெடுக்கும்! ஆண் : இங்கு தரவா நானோரு பரிசு? பெண் : அதைப் பெறவே தூண்டுது மனசு! ஆண் : ஒண்ணு நான்கொடுத்தால் என்ன நீ கொடுப்பாய்? பெண் : உண்ணத் தேன் கொடுப்பேன் என்னை நான் கொடுப்பேன்! (சித்) |
தேர்த் திருவிழா-1968
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 69 | 70 | 71 | 72 | 73 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 71 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண், சித்