மருதகாசி பாடல்கள் - பக்கம் - 70

ஆண் : மழை முத்து முத்துப் பந்தலிட்டு கிட்டக் கிட்டத் தள்ளுது! பெண் : நெஞ்சைத் தொட்டுத் தொட்டு ஆசைகளை புட்டு புட்டுச் சொல்லுது! ஆண் : என்னம்மா பண்ணுது உள்ளதைச் சொல்லு? பெண் : என்னமோ பண்ணுது என்னத்தைச் சொல்ல... (மழை) பெண் : கட்டுக் குலையாத-அரும்பைத் தொட்டு விளையாட-நெருங்கி ஒட்டி உறவாட வந்தது காத்து! ஆண் : மொட்டுச் சிரிப்பாட-இதழில் பட்டு விரிப்பாட-அழகைக் கொட்டி மகிழ்ந்தாடி குலுங்குது பூத்து! பெண் : பூவாகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியாச்சு! ஆண் : அந்தக் கனியும் இப்போ கைக்கு வந்தாச்சு! (மழை) பெண் : வெத்தலை பாக்கு வச்சு-விருந்தை வீட்டிலே கூட்டி வச்சு-தாலி கட்டி என் கைபுடிச்சு கலந்திட வேண்டும்! ஆண் : குத்து விளக்கு வச்சு-குலுங்கும் மெத்தையில் பூவிரிச்சு-இனிக்கும் வித்தையெல்லாம் படிச்சு சுகம் பெற வேண்டும். பெண் : காலாட மேலாடக் கையாட முகம் சிவக்கும்! ஆண் : என் கைகளில் உன் பூவுடல் மிதக்கும். (மழை) |
தேர்த் திருவிழா-1968
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 68 | 69 | 70 | 71 | 72 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 70 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண், வச்சு