மருதகாசி பாடல்கள் - பக்கம் - 68

சித்தாடை கட்டிக் கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு மத்தாப்பூ சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்! அத்தானைப் பார்த்து-அசந்து போயி நின்னாளாம்! (சித்தாடை) முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்! எத்தாகப் பேசி இளமனசைத் தொட்டானாம்! (முத்தாத) குண்டுசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம்-முகம் கோணாமல் ஆசை அன்பாப் பேசும் நல்லவளாம்! அந்தக் கண்டாங்கி சேலைக்காரி கை காரியாம்! அந்தக் கள்ளி அத்தானைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாளாம்! (சித்தாடை) அஞ்சாத சிங்கம் போல வீரம் உள்ளவனாம்!-யானை வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம்! அந்த முண்டாசுக்காரன் கொஞ்சம் முன் கோபியாம்! ஆனாலும் பெண்ணென்றால் அவன் அஞ்சிக் கெஞ்சி நிற்பானாம்! (முத்தாத) முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க! அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க! அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க! அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க அதைக் கண்டு சந்தோஷம் கொண்டாடிப் பாடப் போறாங்க! (சித்தாடை) |
வண்ணக்கிளி-1959
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா & ஜமுனா ராணி குழுவினர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 66 | 67 | 68 | 69 | 70 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 68 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - சித்தாடை, முத்தாத