மருதகாசி பாடல்கள் - பக்கம் - 65

ஆண்: சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே! பெண்: கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே! ஆண்: கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெத்தி வேர்வை போல - அவன் கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே (சொட்டு) பெண்: முட்டாப் பயலே மூளையிருக்கா என்று ஏழைமேலே துட்டுப் படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே - மழை (சொட்டு) ஆண்: முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே முக்காடு எதுக்கு? - உன் முக்காட்டை நீக்கு! தலை ஈரத்தைப் போக்கு! பெண்: இருக்க இடங்கொடுத்தா என்னையே நீதாக்குறே! குறுக்கு மூலை பாயுறே! கோணப் புத்தியெக் காட்டுறே! ஆண்: பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும் இரும்பைப் போலவே!-முகம் சிவக்குதே இப்போ- அது சிரிப்பதும் எப்போ? பெண்: குளிச்சு முழுகிவிட்டுக் குளிர்ச்சியாக ஓடிவா! செவந்து போன முகத்திலே சிரிப்பை நீயும் காணலாம்! |
ஆடவந்ததெய்வம்-1960
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. R. மகாலிங்கம் & P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 63 | 64 | 65 | 66 | 67 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 65 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண், சொட்டு