மருதகாசி பாடல்கள் - பக்கம் - 48
கோமள செழுந் தாமரை. எழில் மேவிய குண சீலா குலமே தான் விளங்க வந்த அருந்தவ பாலா! (கோமள) வளர் பிறையே வானமுதே மாசிலாத பொன்னே! மணமலரே தரையினிலே தவழ விடோம் உன்னை! வளநாடே உன் புகழைப் பாடு மடா பின்னே! வருங்கால மன்னவனே வாழ்க எங்கள் கண்ணே! (கோமள) கதிரவனே மாமன் உனைக் காண ஓடி வருவார்! கண் கவரும் கனக மணி பொம்மைகளும் தருவார்! மதிவாணா உன்னருமை மாமி அலங்காரி உனை வாரித் தழுவிடுவார் உண்மை இன்பம் பெறுவாள்! (கோமள} வளர் பிறையே வானமுதே மாசிலாத பொன்னே! மண மலரே வறுமையினால் வதங்கிடும் என் கண்ணே! தளராத என் இதயம் தளர்ந்ததடா இன்று! தனிமையிலே தவிக்குதடா உங்கள் துன்பம் கண்டு! (கோமள) |
நல்லதங்காள்-1955
இசை : G. ராமநாதன்
பாடியவர்: ஜிக்கி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 46 | 47 | 48 | 49 | 50 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 48 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கோமள