மருதகாசி பாடல்கள் - பக்கம் - 47

பச்சைப் பசுங்கிளியே!-ஜொலிக்கும் பவள வண்ணச் சிலையே! பிச்சையாக எனக்கே-கிடைத்த பேரின்பப் பொக்கிஷமே!-தாலேலோ கண்ணே தாலேலோ! உச்சி குளிருதடா! கண்மணி உன் முகம் பார்க்கையிலே!.என் லட்சியப் பெருங்கனவே-எனது நேத்திரம் நீ தாண்டா! தாலேலோ கண்ணே தாலேலோ! பாசக் கொடியாலே-எனையே பற்றி இழுத்தவனே! ஆசை வெறியில்லையடா-எனது ஆனந்தம் நீ தாண்டா! (பச்சை} தாலாட்டி சீராட்ட-உன்னைப் பெற்ற தாயின்று இல்லையடா! தங்கமே அந்தக் குறை-தீர்ப்பதே இங்கு என் கடமையடா! தாலேலோ! கண்ணே தாலேலோ! அன்பின் உருவமடா-உன் அன்னை என் அருமைப் பிறவியடா! என்றோ மறைந்தாலும்-தெய்வம் போல் இருந்தவள் காத்திடுவாள்! {பச்சை) |
எங்கள் குலதேவி-1959
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 45 | 46 | 47 | 48 | 49 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 47 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - தாலேலோ, கண்ணே