மருதகாசி பாடல்கள் - பக்கம் - 4

M. A. வேணு அவர்களின் வாழ்த்துக்கள்
நான் மாடர்ன் தியேட்டரின் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த நேரத்தில் 1947-ல் மாயாவதி படத்திற்குப் பாடல் எழுத ஆரம்பித்தவர். மெட்டுக்குப் பாட்டமைப்பதில் குறிப்பிடத் தக்கவர். என் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்றவர். T.R.S. அவர்களிடமும் அப்படியே, நான் மாடர்ன் தியேட்டரை விட்டு விலகி வந்து ஆரம்பித்த பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர். பணத்தைப் பெரிது பண்ணாது நட்புக்கே மதிப்புத் தருபவர். வாழ்விலும் தாழ்விலும் ஒரே சீராக நடந்துவருபவர். அவரது திரைப்படப் பாடல் தொகுப்பு வரப்போவது அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அவர் பெற்ற விருதுகளும் பட்டங்களும் பலப்பல :
{gap}}1.திரைக்கவி திலகம் 1959 (குடந்தை வாணி விலாச .சபா) 2.”கலைமாமணி” 1969. இயல், இசை, நாடக மன்றம், 3.தமிழக அரசு பரிசு! 1969, 4.V.G.P. அன்னை சந்தனம்மாள் பரிசு 1984, 5.கவியரசு கண்ணதாசன் நினைவுப் பரிசு 1985. அவருடைய எல்லாப் பாடல்களுமே புத்தக வடிவெடுக்க விரும்புகிறேன். ஆண்டவனும், தமிழக மக்களும் அவருக்கு அந்த சக்தியை அளிக்குமாறு வேண்டுகிறேன்.
அன்புடன் எம். ஏ. வேணு எம். ஏ. வி. பிக்சர்ஸ் |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 4 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பரிசு