மருதகாசி பாடல்கள் - பக்கம் - 37
ஜீவகன்: அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது கரும்பு முகம் கண்டவுடன் கவலை பறக்குது? ரத்னா: பிறந்த போது விருந்து வைக்கும் பெருமையில்லாது-பல பெண்கள் வந்து தொட்டிலாட்டும் சிறப்பு மில்லாது அருமையுள்ள ஆசைத்தந்தை அருகில் இல்லாது வறுமையிலும் சிறுமையிலும் வாட்டம் கொள்ளாது --(அரும்பு) ஜீவகன்: குரலைக் கேட்ட எனது காதில் தேனும் பாயுது இருந்த இடத்தை மறந்து மனம் எங்கோ தாவுது-அது பறந்து பறந்து புதிய புதிய கனவு காணுது~ பிள்ளைப் பாசத்தினால் என் இதயம் ஆடிப்பாடுது --(அரும்பு) ரத்னா: தரம்மிகுந்த வைரமுடி தரையில் கிடக்குது உரிமையுள்ள நெஞ்சம் அதை உணர்ந்து துடிக்குது --(அரும்பு) ஜீவகன்: சிரிப்பது தான் உலகத்திலே கவலைக்கு மருந்து திகட்டாத அமுதமாக இனித்திடும் விருந்து - -(அரும்பு) |
மருத நாட்டு வீரன்-1961
இசை : S.V. வெங்கட்ராமன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன், P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 35 | 36 | 37 | 38 | 39 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 37 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - அரும்பு, ஜீவகன்