மருதகாசி பாடல்கள் - பக்கம் - 28
தொகையறா
கிழக்கு வெளுக்கவே இருளென்ற அழுக்கு விலகவே-சூரியன் கிளம்பி விட்டான் வழக்கம் போலவே உறக்கம் நீங்கியே எழுந்து உழைக்க வேணுமே இந்த உலகெலாம் செழிக்கவே |
பாட்டு
பொழைக்கும் வழியைப் பாரு! ஒழைச்சாதான் சோறு! பொழுதை வீணாக்கி சோம்பேறிப் பேரு! எடுத்துத் திரியாதே! காசு பணம் சேரு! ஓ ... ஓ ... ஓ போடு சீரங்கி கரணம்போடு சீரங்கி-ஹை ஆடுகின்ற அழகிபோல ஆடுசீரங்கி!... புருஷனிடம் புதுப்பெண்டாட்டி காதை கடிப்பதெப்படி பொறுத் திடாத மாமிரெண்டு பூசை கொடுப்பதெப்படி? காட்டு சீரங்கி-செய்து காட்டு சீரங்கி! ஓ ... ஓ ... ஓ |
தொகையறா
ஏ....கண்ஜாடை காட்டும் கைகார ராஜா! முன்னே வந்து நல்லாபாரு முள்ளில்லா ரோஜா! |
பாட்டு
காசு இல்லாமே நட்க்காது-ஐயா காரியம் எதுவும் பலிக்காது! பூசை பண்ணாட்டி அம்மன்தான்-இந்த பூமியிலே வரம் கொடுக்காது! ஓ ... ஓ ... ஓ நீ-இருக்கும் இடந்தன்னிலே-லெஷ்மி என்றும் வாசம் செய்வாள்! சுரக்கும் சுவைப்பாலென்னும் வானமுதம் தந்து சுகமாக உயிர் வாழ வழிசெய்யும் தாயே! |
ஆசை அண்ணா அருமைத் தம்பி-1955
இசை : K.V. மகாதேவன்
பாடியவர்: S.C. கிருஷ்ணன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 26 | 27 | 28 | 29 | 30 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 28 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - சீரங்கி