மருதகாசி பாடல்கள் - பக்கம் - 26

ஆண்: தக்தினதீன் தினதீன் தக்தினதீன்! பெண்:பசி தீருமா? ஆண்: தக்தினதீன்! பெண்: நிலைமாறுமா? பஞ்சத்தினாலே படும் சஞ்சலம்தானே பறந்தோடுமா காலம் ரொம்பக் கெட்டுப்போச்சு ரேஷனுமாச்சு! ரேஷனுமாச்சு! கல்லோடு மண்ணை நாம் சாப்பிடலாச்சு! நாம் சாப்பிடலாச்சு! காறிப்போன சோளம் வாங்கும் காலமும் ஆச்சு! காலமும் ஆச்சு பசி தீருமா? ஆண்: தக்தினதீன்! பெண்: ஹா... பசி தீருமே! பாடுபட்டா லேபஞ்சப்பேயும் தன்னாலே பறந் தோடுமே! ஏர்பிடித்தே சேவை செய்தால் ஏது பஞ்சமே? ஏதுபஞ்சமே ! எந்தநாடும் உணவுக்காக நம்மைக் கெஞ்சுமே! நம்மைக் கெஞ்சுமே! பெண்: கந்தல் ஆடைகட்டி வாழும் காலம் மாறுமா? காலம் மாறுமா? கள்ளச்சந்தைக்காரர் செய்யும் தொல்லை தீருமா! தொல்லை தீருமா? துயர் தீருமா? ஆண்: தக்தினதீன்! பெண்: துயர்தீருமே! சோம்பலில்லாமே தினம் பாடுபட்டாலே சுகம் நேருமே! கட்சி பேசி கலகம் செய்து திரிந்திடாமலே! திரிந்திடாமலே! கடமையோடு தொண்டு செய்தால் கஷ்டம் நீங்குமே! கஷ்டம் நீங்குமே! ஆட்சியை குறைகூறுவதால் ஏதுலாபமே? யாவருமே சேர்ந்து நன்றாய் தன்னல மில்லா சேவை செய்வோமே! சேவை செய்வோமே! All: சேவை செய்வோமே! சேவை செய்வோமே! பெண்: எந்நாளுமே! All: சேவை செய்வோமே! சேவை செய்வோமே! |
ராஜாம்பாள்-1951
இசை : ஞானமணி
பாடியவர்: S. C. கிருஷ்ணன், ஜிக்கி குழுவினர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 26 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - சேவை, செய்வோமே, பெண், தீருமா, தக்தினதீன், காலம்