மருதகாசி பாடல்கள் - பக்கம் - 24
(தொகையறா)
நாம் பொறந்த சீமையிலே பூமி செழிப்பாச்சி-முப் போகம் வெளஞ் சாச்சு-இல்லையென்ற பேச்சே இல்லாமல் போச்சு-இனி எந்நாளும் நமக்கு திரு நாளுமாச்சு? இனி பஞ்சப் பாட்டு பாடாமெ கஞ்சிக்காக வாடாமெ நஞ்செ புஞ்செ நல்ல ராசி தந்தது-பலன் நம்ம வீடு தேடியோடி வந்தது! காலை முதல் மாலை வரை கஷ்டப்பாடு பட்ட நாங்க கனவு கண்ட தான்ய லெட்சுமி தாயே-எங்க கவலை தீர வந்த தேவி நீயே! பொங்கல் விழா கொண்டாட செங்கரும்பும் வாழைத் தாரும் மஞ்ச கொத்தும் இஞ்சி கொத்தும் பூவும்-நாம சந்தையிலே வாங்கி வரப் போவோம்! பிள்ளைகளின் வாயினிக்க வெண் பொங்கல் பால் பழம் பெரியோருக் கெல்லாம் தரவேணும் தாம்பூலம்! அள்ளி அள்ளி நெல்லை யெல்லாம் அன்பாக வழங்கு வோம் ஆடுகளும் மாடுகளும் பெருக என்று முழங்குவோம்-- பொங்கலோ! பொங்கல். (இனி) |
குடும்ப கெளரவம்-1958
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்: S. C. கிருஷ்ணன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 24 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பொங்கல்