மருதகாசி பாடல்கள் - பக்கம் - 204

உய்...... ஆடிவரும் பூங்கொடி அழகினிலே மனம் ஆடுதா ? தடுமாறுதா ? ஆஹா அலைபோலே பின்னாலே அய்யாவின் மனம் போகுதா ? ஆசைவலை பின்னி ஜாடைகளும் பண்ணி ஆடுதா ? - திண்டாடுதா ? வாருங்க மைனர் சார்-உங்க வாழ்க்கையே ஜாலி தான் ! பாருங்க பர்ஸையே அது என்றுமே காலிதான் ! தனிக் கவர்ச்சியுண்டு இவர் face லே அதில் காலம் ஓடுதுங்க ஒசிலே ! உய்...... உண்மையைச் சொன்னதை எண்ணி எண்ணியே கோபமா? மனஸ்தாபமா ? ஆட்டத்தில் நாட்டமா ? ஆள் மீது கண்ணோட்டமா ?. பாட்டையே கேட்டதால் உண்டான கொண்டாட்டமா ? கை தாளம் தவறாகப் போடுதே ! கலை ஞானி போல தலையாடுதே !. உய்... அந்தரத்து மின்னலை சொந்தங் கொள்ள எண்ணினால் நடக்குமா? அது கிடைக்குமா-உய்..... தோற்றத்தில் துறவி போல் வெளி வேஷம் போடு வாங்க! கூட்டத்தில் பெண்களை குறிப்பாகத் தேடு வாங்க! ஏமாற்றும் ஆசாமி நொடியிலே ஏமாளியாவானே முடிவிலே-உய்... |
திலகம்-1960
இசை: சுதர்சனம்
பாடியவர்: ஜமுனராணி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 200 | 201 | 202 | 203 | 204 | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 204 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -