மருதகாசி பாடல்கள் - பக்கம் - 200
ஒருவன்: லாபமா? நஷ்டமா?-நைனா லாபமா? நஷ்டமா? ராசாங்கம் நம்ம கையில் வந்ததாலே நாட்டிலுள்ள மக்களுக்கு நம்மளாலே- (லாபமா) சாலையிலே நிக்கும் மரம் சர்க்காரு வச்சமரம் ஆளுமேலே சாஞ்சுதுனா ஆபத்து-அவன் ஆவியது போகுமிண்ணு யூகிச்சு-நல்லா வேரைக் கெல்லி மரத்தையெல்லாம் வெட்டித் தள்ளி காயவச்சு வித்து விடச் சொல்லி விட்டேன் காசுக்கு வெறகு பஞ்சம் தீர நம்முடைய ஊருக்கு நைனா-லாபமா?-நஷ்டமா? இதனால்-லாபமா?-நஷ்டமா! மற்றொருவன்: பழங் கொடுத்துப் பலன் கொடுக்கும். பல மரமும் போனா நிழலும் ஏது பணமும் ஏது லாபமேது நைனா! ஒருவன்: சத்திரங்கள் இருப்பதாலே தண்ட சோத்து சாமிகளே ஜாஸ்தியர்கிப் போச்சு நம்ப நாட்டிலே-அதுக சஞ்சரிக்க வேண்டியது காட்டிலே-அதனால் இத்தினமே எங்குமுள்ள சத்திரத்தை இடிச்சு தள்ள உத்தரவு போட்டு விட்டேன் நேருலே-எனைப் - போல் புத்திசாலி யாரு இந்த ஊரிலே? நைனா-லாபமா-நஷ்டமா? இதனால்-லாபமா-நஷ்டமா? இடிச்சுத் தள்ள ஏகப்படட செலவு ஆகும் போது இருப்ப தெல்லாம் கறைஞ்சு போகும் லாபமேமிலேது? சம்பளமும் வாங்கிக் கிட்டு கிம்பளமும் பெத்துக் கிட்டு சட்ட திட்டம் போடும் அதிகாரிங்க-தம்மைத் தள்ளிப் போட்டேன் வேலை விட்டு நானுங்க - இனி சம்பளமும் மிச்சம் பல வம்புகளும் மிச்சம்-நம்ப சனங்களுக்கும் இல்லை ஏதும் சங்கடம்-மனசில் சந்தோஷம் தன்னாலே பொங்கிடும் நைனா-லாபமா-நஷடமா? இதனால்-லாபமா-நஷ்டமா? |
சதாரம்-1956
இசை: G. ராமநாதன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 198 | 199 | 200 | 201 | 202 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 200 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - லாபமா, நஷ்டமா, நைனா, இதனால்