மருதகாசி பாடல்கள் - பக்கம் - 176

தொகையறா
தூங்கையிலே வாங்குகிறமூச்சு-இது சுழிமாறிப் போனாலும் போச்சு!-உளுத்த மூங்கில் உடல் மேல்மினுக்குப் பூக்சு!-என்ற மொழி என்றும் உண்மையான பேச்சு! |
(பாட்டு)
இன்பமெங்கே? இன்பமெங்கே? என்றுதேடு!-அது எங்கிருந்த போதும் அதை நாடி ஒடு! இன்றிருப்போர் நாளையிங்கே இருப்பதென்ன உண்மைl-இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்துக் காத்து என்ன நன்மை? இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை! இல்லையென்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை? (இன்ப). கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்! கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்! இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம்!-அவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்! (இன்ப) மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்! வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்! மழலைமொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம்!-உன் மார்மீது உதைப்பதிலே கிடைப்பதுதான் இன்பம்! |
மனமுள்ள மறுதாரம்-1958
இசை: K. V. மகாதேவன் -
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 174 | 175 | 176 | 177 | 178 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 176 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - இன்பம்