மருதகாசி பாடல்கள் - பக்கம் - 175

பிளாட்பாரம் மட்டமுண்ணு எண்ணாதீங்க-சும்மா பேச்சுக்குப் பேச்சு கேலி பண்ணாதீங்க1 ஆளுமேலே காருமோதி ஆஸ்பத்திரி போகாமே அனுதினம் காப்பது பிளாட்பாரம்! கூழுக்காக நாள் முழுதும் பாடுபடும் ஏழைகளின் கூரையில்லா வீடு இந்த பிளாட்பாரம்! சாதிமத பேதமின்றி ஏழை பணக்காரருக்கும் சமத்துவம் கொடுப்பது பிளாட்பாரம்! காசையெல்லாம் கோட்டைவிட்ட ஊதாரிச் சிமான்கள் ! கடைசியில் சேரும் இடம் பிளாட்பாரம்! (பி). காதல் கொண்ட ஆணும்பெண்ணும் மத்தவங்க காணாமே! கண்ணாலே பேசும் இடம் பிளாட்பாரம்!-யாரும் காலேஜில் படிக்காத பாடங்களைக் கற்றுத்தரும் அனுபவப் பள்ளிக் கூடம் பிளாட்பாரம்! (பி) கட்சியின் பெயராலே லட்சிய முழக்கமிட்டால் உச்சியிலே ஏற்றுவதும் பிளாட்பாரம்!-பிறகு கட்சிவிட்டு கட்சி மாறும் பச்சோந்திக் கும்பலைக் காலைவாரி விடுவதும் பிளாட்பாரம்! எளக்காரமாகவே பணக்காரர் ஏழைக்கு இடுகின்ற செல்லப் பெயர் பிளாட்பாரம் எவர் எது சொன்ன போதிலும் அஞ்சாமல் கடமையை எப்பொழுதும் செய்யுமிந்த பிளாட்பாரம்! |
தேடி வந்த செல்வம்-1958
இசை: T. G. லிங்கப்பா
பாடியவர்: S. C. கிருஷ்ணன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 173 | 174 | 175 | 176 | 177 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 175 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பிளாட்பாரம்