மருதகாசி பாடல்கள் - பக்கம் - 173

ஆண்: ஆத்திலே தண்ணி வர அதில் ஒருவன் மீன் பிடிக்க காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவது ஏன்? கண்ணம்மா! அதைப் பாத்து அவன் ஏங்குவதேன்? சொல்லம்மா! பாத்தி கட்டி நாத்து நட்டு பலனெடுக்கும் நாளையிலே பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாய் போவது ஏன்? கண்ணம்மா! கலப்பை புடிச்சவனும் தவிப்பது ஏன்? சொல்லம்மா! பெண்: னன்னானே னானே னானே னானே னன்னானே னன்னானே னன்னானே. னானே னன்னானே ஆண்: பஞ்செடுத்து பதப்படுத்தி பக்குவமாய் நூல் நூற்று நெஞ்சொடிய ஆடை நெய்வோன் கண்ணம்மா!.இங்கு கந்தலுடை கட்டுவதேன்? சொல்லம்மா! காத்திருக்கும் அத்தை மவன் கண் கலங்கி நிற்கையிலே நேத்து வந்த ஒருவனுக்கு மாத்து மாலை போடுவதேன் கண்ணம்மா!-அவள் நேத்திரத்தை பறிப்பது ஏன்? சொல்லம்மா? பெண்: ணன்னானே. ஆண்: ஏற்றத்தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பது தான் இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா! இதை எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா! (ஆத்தி) பெண்: னன்னானே........ ஆண்: கண்ணம்மா! சொல்லம்மா! கண்ணம்மா சொல்லம்மா! கண்ணம்மா! வ.வ....வண்ணம்மா! |
வண்ணக்கிளி-1959
இசை: K. V. மகாதேவன் .
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 171 | 172 | 173 | 174 | 175 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 173 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கண்ணம்மா, சொல்லம்மா, னன்னானே, னானே, பெண்