மருதகாசி பாடல்கள் - பக்கம் - 167

வாழ்க நமது நாடு! வளரும் அன்பினோடு! சூழ்க என்றும் நல்லறங்கள் என்று சொல்லி பாடு! வானம் பெய்து நாட்டிலே வளம் நிறைந்து வீட்டிலே மாசில்லாத இன்பம் பொங்கி மக்கள் வாழ்க்கை ஏட்டிலே தேர்ந்த கல்வி ஞானம் செல்வம் சேர வேணும்! தேசமெங்கும் தேனும் பாலும் பெருகி ஓட வேணும் - (வாழ்க) சண்டையின்றி யாவரும் ஒன்று பட்டு வாழுவோம்! அண்டை நாட்டு மக்கள் தம்மை அன்பினாலே வெல்லுவோம்! நெஞ்சில் நேர்மை ஈரம் அஞ்சிடாத வீரம்! சொந்தங் கொண்டு வள்ளலாக வாழவேணும் யாரும்: (வாழ்க) நீதியுள்ள ஆட்சியே நிலவுகின்ற மாட்சியே யாருங்கான நமது நாடு ஆக வேணும் சாட்சியே! ஏழை என்ற சொல்லே இந்த நாட்டில் இல்லை என்று யாரும் சொல்ல நாமும் செய்ய வேணும் சேவையே! (வாழ்க) |
சாரங்கதரா-1958
இசை: G. ராமநாதன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 165 | 166 | 167 | 168 | 169 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 167 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - வேணும், வாழ்க