மருதகாசி பாடல்கள் - பக்கம் - 166

கண்ணைப் போல தன்னைக் காக்கும் அன்னை தந்தையே-உணர்ந்து சொன்ன சொல்லைப் போற்ற வேணும்! தூய சிந்தையே-இதுவே அறிவுடமை ஒரு கன்னியின் கடமை! முன்னும் பின்னும் எண்ணிப் பார்த்து நடந்திட வேண்டும்! கண்ணை காதை வாயை அடக்கும் தன்மையும் வேண்டும்! பொன்னில் பொருளில் ஆசையின்றி இருந்திட வேண்டும்! போது மென்ற மனதுடனே! மகிழ்ந்திட வேண்டும் இதுவே அறிவுடமை! ஒரு கன்னியின் கடைமை! அடங்கி ஒடுங்கி அன்பு காட்டும் பண்டியில்லாது-பூணும் அணி பணியால் வந்து சேரும் அழகு நில்லாது! தொடர்ந்து துன்பம் வந்த போது . துணிவுயில்லாது.தங்கள் குடும்பப் பெயரை குலைக்கும் முறையில் நடக்கக் கூடாது! இதுவே அறிவுடமை! ஒரு கன்னியின் கடமை! புன்னகையைப் பொன்னகையாய் போற்றிட வேண்டும்-நல்ல புத்தி சாலி என்னும் பெயரை ஏற்றிட வேண்டும் கண்ணகி போல் கற்பு நெறி காத்திட வேண்டும்! பணக்காரப் பெண்கள் கூட்டுறவை விலக்கிட வேண்டும்! இதுவே அறிவுடமை ஒரு கன்னியின் கடமை |
நான் சொல்லும் ரகசியம்-1959
இசை: G. ராமநாதன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 164 | 165 | 166 | 167 | 168 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 166 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - வேண்டும், இதுவே, கன்னியின், அறிவுடமை, கடமை