மருதகாசி பாடல்கள் - பக்கம் - 165

புதிய வாழ்வு பெறுவோம்!-மதியினால் விதியை வெல்ல முயல்வோம்! கெதியை நொந்திடாமல்-கால கெதியை நொந்திடாமல் கடமையைச் செய்வோம்! (புதிய) உழவைப் போற்றி வளர்ப்போம்!-சகல உயிர்க்கும் உணவு அளிப்போம்! பஞ்சப் பிணியைத் தொலைப்போம்!-சமதர்மப் பாதை தன்னை வகுப்போம்! . (புதிய) எழுத்தறிவில்லார் என்பவரே-இங்கே எவருமில்லாமல் செய்திடுவோம்! பகுத்தறிவாளர் பாசறையாய் பாரில் நம் நாட்டை ஆக்கிடுவோம்! (புதிய) இந்த நாட்டின் எதிர்காலம் இஞைர்கள் கையில் இருப்பதாலே அவர்களை வளர்க்கும் மாதர் அறிவே வளர்ந்திடும் மார்க்கம் காணச் செய்வோம். (புதிய) |
அமரகவி-1952
இசை: G. ராமநாதன்
பாடியவர்: M. K. தியாகராஜபாகவதர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 163 | 164 | 165 | 166 | 167 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 165 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -