மருதகாசி பாடல்கள் - பக்கம் - 154
சமாதானமே தேவை அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை அமைதியாக நாம் வாழ்ந்திடவே அன்பும் அறமும் வளர்ந்திடவே சமரசப் பாதை தோன்றிடவே சாந்தியும் இன்பமும் சூழ்ந்திடவே (சமாதான) போட்டிப் பொறாமைகள் இல்லாத-ஒரு புதிய சமுதாயம் உருவாக-புத்தர் காட்டிய வழியில் நாம் போக-அவர் கண்ட கனவுகள் நனவாக (சமாதான) கட்சி பேதங்கள் எதற்காக?-பல கலகமும் பகையும் எதற்காக? ஒற்றுமையால் நாம் உயர்ந்திடுவோம்! ஒரே கட்சியாய் இருந்திடுவோம்! (சமாதான) |
மருத நாட்டு வீரன் -1961
இசை: S. V. வெங்கட்ராமன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 152 | 153 | 154 | 155 | 156 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 154 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - சமாதான, நாம்