மருதகாசி பாடல்கள் - பக்கம் - 127
பாலுந் தேனும் பெருகி ஓடுது பரந்த சீமையிலே நாம் பொறந்த சீமையிலே! ஆனா பாடு படுறவன் வயிறு காயுது பாதி நாளையிலே-வருவத்தில் பாதி நாளையிலே! ஒ....என்னடா தம்பி நேராப்போடா மனுஷனை மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே-இது மாறுவதெப்போ? தீருவதெப்போ? நம்மக் கவலே! வானம் பொழியுது! பூமி விளையுது! தம்பிப் பயலே-நாம் வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே.ஆனா தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே-இது தகாதுயின்னு எடுத்துச் சொல்லியும் புரியலே-அதாலே (மனுஷனை) தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு-தன் குறையை மறந்து மேலே பாக்குது பதரு-அதுபோல் அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது நாட்டுலே-அதாலே (மனுஷனை) ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப்பயலே. எதுக்கும் ஆமாம்சாமி போட்டுவிடாதே தம்பிப்பயலே! பூனையைப் புலியாய் எண்ணிவிடாதே தம்பிப்பயலே ஒன்னைப் புரிஞ்சுக்காம நடக்காதேடா தம்பிப்பயலே!-டேய் (மனுஷனை) |
தாய்க்குப்பின் தாரம்-1956
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 125 | 126 | 127 | 128 | 129 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 127 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - தம்பிப்பயலே, மனுஷனை