மருதகாசி பாடல்கள் - பக்கம் - 117
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே-உன்னை நீங்கிடாத துன்பம் பெருகுதே! அணைந்த தீபமாய் ஆகிப் போனதே-வாழ்க்கை உடைந்து போன சிலையானதே! நான் அடைந்த செல்வம் கொள்ளை போனதே! அமைதி யின்றியே அலைய நேர்ந்ததே (நினை) எங்கிருந்து நீவாடுகின்றாயோ? துன்ப கீதமே பாடுகின்றாயோ? இந்த நிலை என்று மாறுமோ?-உனைக்காணும் இன்ப நாளுமே வந்து சேருமோ? (நினை) |
சதாரம் -1956
இசை: G. ராமநாதன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 115 | 116 | 117 | 118 | 119 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 117 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -