மருதகாசி பாடல்கள் - பக்கம் - 115
வசந்தா: மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய்விடு! இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய்விடு! மீனா: மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய்விடு! இனிய காதல் நினைவே போதும் - பிரிந்து போய்விடு! வசந்தா: விதைப்ப தெல்லாம் முளைப்பதில்லை மண்ணின் மீதிலே! முளைப்ப தெல்லாம் விளைவதில்லை இந்த உலகிலே! மீனா: மலர்வ தெல்லாம் மணப்பதில்லை பூமி தன்னிலே! வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை பலரின் வாழ்விலே! ஒரு நிலாதான் உலவ முடியும் நீலவானிலே உணர்ந்த பின்னால் கலங்கலாமோ உள்ளம் வீணிலே! வசந்தா: உருகி உருகி கரைவதாலே பலனுமில்லையே! ஒடிப்போன காலம் மீண்டும் வருவதில்லையே! இருவரும்: மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய்விடு! இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய்விடு! |
மாடப் புறா-1962
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்கள்: P. சுசிலா & ஜமுனாராணி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 113 | 114 | 115 | 116 | 117 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 115 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - போய்விடு, நினைவே, போதும், பிரிந்து, தெல்லாம், காதல், இனிய, கொண்ட, ஆசைகளை, மறந்து, வசந்தா, மனதில்