மருதகாசி பாடல்கள் - பக்கம் - 113

கள்ள மலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே கன்னி மனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே! சொல்லுமின்றி மொழியுமின்றி மெளனமாகப் படித்தாள்! உள்ள மதைக் குருவுக்கவள் காணிக்கையாய் கொடுத்தாள்! துள்ளியெழும் ஆசையால் தூக்கமின்றி தவித்தாள்! கொள்ளையிட்டக் கள்வனுக்கு மாலை போடத் துடித்தாள்! (கள்ள) அன்புக் கைகள் அணைப்பிலே ஆசை திரும் பொன்நாள்! இன்ப மென்னும் உலகினிலே இணைந்து வாழும் நன்நாள்! என்று வரும் என்று வரும் கனவு காணும் அந்நாள்! என்று எண்ணி ஏங்குகிருள் அன்னநடைப் பெண்ணான் (கள்ள) |
குலமகள் ராதை-1963
இசை: K. V. மகாதேவன்
பாடியவர் : P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 111 | 112 | 113 | 114 | 115 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 113 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கள்ள