மருதகாசி பாடல்கள் - பக்கம் - 112

ஆடும் மயிலே அழகு நிலாவே வாடா மலரே வருக! பாடும் குயிலே செந்தமிழ் பேசும் பைங்கிளியே நீ வருக! (ஆடும்) மாங்கனிபோலே பளப்பளப்பாக மின்னும் உந்தன் கன்னம்-அதில் வண்டுகள் போலே தாவிடும் எங்கள் மன்னரின் இரு கண்ணும்! மதுரசம் பருகிட அவர் மனம் எண்ணும்! இருவரும் உலகில் இணைவது திண்ணம்! மாதவி நீதானே! கோவலன் அவர்தானே! (ஆடும்) பஞ்சணை மீது கொஞ்சிக் குலாவி பாலும் பழமும் தருவார்-இவர் பாவை உந்தன் கோவை இதழில் பரிசாய் முத்தம் பெறுவார் பரவச வெறியில் தனை மறந்தாடும் உறவினில் புதுமுறை கவிதை பாடும் ஊர்வசி நீதானே ! இந்திரன் அவர்தானே! (ஆடும்) |
மன்னாதி மன்னன்-1960
இசை: M. S. விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: ஜமுனாராணி & குழுவினர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 110 | 111 | 112 | 113 | 114 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 112 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - ஆடும்