மருதகாசி பாடல்கள் - பக்கம் - 109

வீசிய புய லென்னும் விதி வலியால் துவண்டு விட்ட வாச மலர்க் கொடிக்கு வாழ்வு தர ஒடி வந்தாய்! ஆசை யென்ற கை கொடுத்தாய்! பாசமென்ற பந்தல் போட யோசனையும் செய்வது ஏன்? உணர்ந்து பாராய் மனமே? |
(பல்லவி)
அசைந்து குலுங்கும் சதங்கை ஒலியும் ஆயிரம் கதைகள் சொல்லிடுமே! அழகும் இளமையும் காண்பவர் இதயம் அலைகடல் போலே துள்ளிடுமே!- (அசைந்து) |
(சரணம்)
வசந்த முல்லைத் தேனெடுத்து வண்ணச் சந்தனப் பொடி சேர்த்து கலந்தே செய்த சிலை வடிவம்-என கருதிடச் செய்யும் பெண்ணுருவம்! - (அசைந்து) கண்ணில் மின்னல் விளையாட! கையில் வளையல் இசை பாட! அன்னம் போல நடை போடும்-ஒரு கன்னிப் பெண்ணின் கால்களிலே- (அசைந்து) |
எல்லாம் உனக்காக-1961
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 107 | 108 | 109 | 110 | 111 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 109 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - அசைந்து