மருதகாசி பாடல்கள் - பக்கம் - 106

வெற்றி கொள்ளும் வாளேந்தி சுற்றும் வீரர் இருகையைப் பற்றிக் கொண்டேன் என் கையிலே-இனி வேறென்ன தேவை வாழ்விலே!-இந்த ஜெகமே என்கையிலே! தாவென்று கேட்குமுன் “இந்தா” வென்றே அள்ளி ஒய்வின்றி தரும் 'கை' என் கையிலே!-இனி சீருண்டு பேருண்டு வாழ்விலே!-இந்த ஜெகமே என் கையிலே! கனவாகவே துன்பக் கதையாகவே-சென்ற காலத்தின் நினைவும் எனக்கில்லையே!- என் கண்முன்னே நான் காணும் வாழ்விலே!-இந்த ஜெகமே என் கையிலே! எந்நாளும் என்னைக் கண் போலவே காக்கும் பண்பாளர் துணையும் உண்டானதே-இனி தன்மானப் பெருவீரர் அன்பிலே-இந்த ஜெகமே என் கையிலே! |
பாக்தாத் திருடன்-1960
இசை: கோவிந்தராஜலு நாயுடு
பாடியவர் : P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 104 | 105 | 106 | 107 | 108 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 106 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கையிலே, ஜெகமே, வாழ்விலே