மருதகாசி பாடல்கள் - பக்கம் - 105

பெண்: பொங்கிவரும் காவிரியே எங்களது தாயே! கங்கையினும் மேலான கன்னித்தெய்வம் நீயே! ஆண்: மங்கையரின் முகத்தழகு மஞ்சள் பூச்சினாலே! மாநிலத்தின் அழகுனது வண்டல் பாய்ச்சலாலே! பெண்: அங்கமெல்லாம் அலைபுரள அசைந்து வரும் பாவை ! செங்கரும்பு பயிர்வளரச் செய்வதும் உன்சேவை! ஆண்: மாலையிட்ட மங்கையர்கள் தாலி பெருக்கிப் படைப்பார்! மணவாளன் கைபிடித்து சிரித்தபடி நடப்பார்! பெண்: வாளையைப்போல் காளையர்கள் தாவித் தாவிக் குதிப்பார்! மனங் கவரும் கன்னியர்மேல் நீரை வாரி - இறைப்பார்! பெண்: மலை முடியில் பிறந்ததனால் மலைமகளும் நீயே! அலைகடலில் கலந்ததனால் அலைமகளும் நீயே! ஆண்: சலசலக்கும் ஒசையிலே ஏழுசுரம் தந்தாயே! பெண்: தமிழ் முழக்கம் செய்வதனால் கலைமகளும் நீயே! |
பொன்னித்திருநாள்-1960
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 103 | 104 | 105 | 106 | 107 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 105 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண், நீயே