மருதகாசி பாடல்கள் - பக்கம் - 104

சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு! திண்டாடச் செய்திடும் மை பூசுங் கண்ணு! செந்தாழைமேனி சிங்கார மூட்டும்! மண்மீது மாயா ஜாலங்கள் காட்டும்! கண்டோரை எல்லாம் கொண்டாடச் செய்யும்! கண்பார்வை அமுதெனும் தேன்மாரி பெய்யும்! கல்லான நெஞ்சை சொல்லாமல் தாக்கும்! கொல்லாமல் கொல்லும் காயம் உண்டாக்கும்! வல்லாண்மைக் காரர் செல்வாக்கைப் போக்கும்! மன்னாதி மன்னரை மண் பொம்மையாக்கும்! ஆடாமல் ஆடும்! பாடாமல் பாடும்! அழகின் முன்னாலே அறிவே தள்ளாடும்! கூடாத செல்வம் எல்லாமே கூடும்! குறையுள்ள போதிலும் பின்னாலே ஒடும்! |
பாக்தாத் திருடன்-1960
இசை: கோவிந்தராஜலு நாயுடு
பாடியவர்: P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 102 | 103 | 104 | 105 | 106 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 104 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -