முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
முகம் மட்டும் மலரும்படியாக நட்பு செய்வது நட்பு அன்று; நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.