செவிக்குண(வு) இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லதபொழுது, அதற்குத் துணையாக உடலை ஓம்புவதன் பொருட்டு வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.