வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்துறு போலக் கெடும்.
குற்றம் நேர்வதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை நெருப்பின் முன்னர் வைத்த வைக்கோல் போர்போல் அழிந்து விடும்.